அதிமுக தலைமையின் திடீர் அறிவிப்பால் ஷாக்கான லால்குடி வேட்பாளர்!

0
66

விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரவிருக்கிறது இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திப்பதற்காக பரபரப்பாக இயங்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் அந்த கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அனைத்தும் ஒதுக்கி முடிக்கப்பட்டு விட்டது.

ஆனால் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. இருந்தாலும் அந்த கட்சிக்கு அதிமுக தலைமை 6 தொகுதிகள் தான் ஒதுக்கியது.

அந்த ஆறு தொகுதிகள் வருமாறு, பட்டுக்கோட்டை, திருவிக நகர், லால்குடி, தூத்துக்குடி, ஈரோடு, கில்லியூர், போன்ற தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னரே அதிமுக சார்பாக லால்குடி தொகுதிக்கு ராஜாராம் என்பவரை அந்த கட்சியின் தலைமை வேட்பாளராக அறிவித்து இருந்தது. இருந்தாலும் அந்த தொகுதி தற்சமயம் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதிமுக சார்பாக வேட்பாளராக களமிறக்கப்பட்ட ராஜாராமனை திரும்பப் பெறுவதாக அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது.

அதோடு தஞ்சாவூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்சமயம் அதிமுக தலைமை அறிவித்திருக்கிறது. தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடை நம்பியும் பெரம்பலூர் தொகுதியில் இளம்பை தமிழ்ச்செல்வனும் களம் காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இதுவரையில் அதிமுக சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.