இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு!

0
98
Ban on petrol and diesel in all these! A new order came to Tamil Nadu!
Ban on petrol and diesel in all these! A new order came to Tamil Nadu!

இனி இவற்றிலெல்லாம் பெட்ரோல் டீசல் அடிக்க தடை!  தமிழகத்திற்கு வந்த புதிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் வானத்தை எட்டும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 103 ஆக உள்ளது. இதனால் வாகனங்களை வைத்து பிழைப்பு நடத்தும் பயனாளிகளுக்கு பெரிதும் கவலையை அளிக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இனிவரும் நாட்களில் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படாது என கூறியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பிஎப்ஐ நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதில் அந்நிறுவனத்தின் செயலாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை போலீசார் கைது செய்தனர்.

அதனை எதிர்த்து கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அரசு பேருந்து மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து  தலைமைச் செயலாளர் இறையன்பு 17 மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் கேன் அல்லது பாட்டில்களில் பெட்ரோல் கேட்டு வருபவர்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தரக்கூடாது என்று காவல்துறை முடிவெடுக்கப்பட்டது. ஏனென்றால் இந்த 17 மாவட்டங்களில் தினம் தோறும் பெட்ரோல் குண்டுகள் வீசி வன்முறையை ஏற்படுவதால்,இதனை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோல் வணிக சங்கமும் இனி பாட்டில்களில் பெட்ரோல் டீசல் வழங்கப்படாது என்று கூறியுள்ளனர்.