தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

0
76

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

 

தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.

 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.

 

தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக உள்ளது. இருப்பினும், பாஜக அரசின் பல்வேறு தவறான நடவடிக்கைகள், பொருளாதார திட்டங்கள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட காரணங்களால் மோடி அலை மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது.

 

இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னிந்தியா பாஜக கட்சியை, மோடியை கைவிட்டாலும், வட இந்தியாவில் நிறைய நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது.  மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வெற்றியின் மூலம் மோடி அலை அப்போது இன்னும் பலமாக வீசத் தொடங்கியது.

 

ஆனால் அதன் பிறகு மெல்ல மெல்ல நரேந்திர மோடி அலை சரிய தொடங்கி உள்ளது. தற்போது தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இல்லை.

 

தென்னிந்தியாவில் மோடியின் செல்வாக்கு மெல்ல, மெல்ல சரியத் தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி குறித்த நகைச்சுவை பதிவுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை சரியத் தொடங்கி உள்ளதா? என்ற  விவாதமும் தற்போது எழுந்துள்ளது.

 

கடந்த நாடாளுமன்ற தேர்தலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் குறிப்பாக தென்னிந்தியாவில் பாஜக கட்சி குறைந்த இடங்களில் வெற்றிபெறும் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இருப்பினும் வட இந்தியாவில் மோடி அலை பலமாக,  தொடர்ந்து வீசுவதால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.