விநாயகர் சதுர்த்தி! தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள்!

0
137

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவை கட்டுப் படுத்தும் விதத்தில் ஊரடங்கு சட்டம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்க பட்டிருக்கிறது. நேற்றைய தினம் இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்த பிறகு அதில் மதப் பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற ஒரு அறிவிப்பு எதிர்வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக செயல்படுமாறு நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அதோடு தற்சமயம் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடியதால் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் வருகின்ற 15ஆம் தேதி வரையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் கொண்டாட இருக்கின்ற சமய விழாக்கள் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

பொது இடங்களில் உரியடி போன்ற விளையாட்டுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா குறித்து பொது இடங்களில் சிலைகளை வைப்பது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி கிடையாது. அதே போல சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து தனி நபர்கள் தங்களுடைய வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் தனி நபர்களாக சென்று அருகில் இருக்கின்ற நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் கடற்கரையில் குறிப்பாக சாந்தமும் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழியில் இந்த செயல்பாட்டிற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட அனுமதி தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் அமைப்புகள் இந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது முழுமையாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டம் மற்றும் மற்ற மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்பட இருக்கின்ற மரியன்னையின் பிறந்த நாள் திருவிழாவின் போது பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.