மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு! களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு!

0
61

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற வங்கி கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் சமயத்தில் பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார்.

சென்னையில் இருக்கின்ற ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து தமிழ்நாட்டில் இருக்கின்ற பல கிளைகளுக்கு பணம் சாலை வழியாகவும், ரயில்கள் மூலமாகவும், கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றை கொண்டு செல்லும் போது பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் இதனை தடுக்கும் விதத்தில் பணம் கொண்டு செல்லப்படும்போது இரட்டைத் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

அதில் ரிசர்வ் வங்கியின் கருவூலத்திலிருந்து பணம் கொண்டு செல்லும்போது வாகனங்களுக்கு பாதுகாப்பை அதிகரியுங்கள் அதோடு மூத்த வங்கி அலுவலர்களின் ஆலோசனையின் படி பணம் வைத்திருக்கும் வங்கி கருவூலங்களுக்கு பாதுகாப்பை அதிகரியுங்கள் என்று கூறியிருக்கிறார் சைலேந்திர பாபு.

இதுகுறித்து சமீபத்தில் தேசிய வங்கிகளின் மூத்த அலுவலர்களுடன் நடைபெற்ற மாநில அளவிலான பாதுகாப்பு குழு கூட்டத்தில் பணத்தை எடுத்துச் செல்லும் சமயத்தில் பாதுகாப்புக்கு என்று போடப்படும் காவலர்களுக்கு போதுமான ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வங்கி அலுவலர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதனால் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இயங்கி வருகின்ற தேசிய வங்கிகளில் கருவிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப் படுகிறதா? எனவும் பாதுகாப்பில் ஈடுபடும் காவலர்கள் ஆயுதங்களை முறையாக வைத்திருக்கிறார்கள்? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.