டயாபடிஸ் உள்ளவர்களுக்கு சிறந்த பண்டம் “கறிவேப்பிலை முறுக்கு” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

0
25
Best product for Diabetics is
Best product for Diabetics is "Curry Leaf Twist" - Delicious!!

டயாபடிஸ் உள்ளவர்களுக்கு சிறந்த பண்டம் “கறிவேப்பிலை முறுக்கு” – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

நம் உணவில் வாசனைக்காக சேர்க்கப்படும் கறிவேப்பிலையில் அதிகளவு இரும்புச் சத்து,போலிக் அமிலம் நிறைந்து இருக்கிறது.இந்த கருவேப்பிலையை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் சர்க்கரை நோய்,பித்தம்,குமட்டல்,செரிமான பிரச்சனை உள்ளிட்டவை சரியாகும்.

அதேபோல் முடி வளர்ச்சிக்கு இந்த கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.இதை வைத்து குழம்பு,துவையல்,சாதம் உள்ளிட்டவை செய்து உண்ணப்பட்டு வருகிறது.கருவேப்பிலை பிடிக்காது என்று சொல்பவர்களுக்கு அதில் முறுக்கு செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்

*கறிவேப்பிலை – 3 கொத்து

*அரிசி மாவு – 1 கப்

*உளுத்த மாவு – 1/4 கப்

*பச்சை மிளகாய் – 4

*சீரகம் – 3/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரம் எடுத்து அதில் 3 கொத்து கருவேப்பிலை,4 பச்சை மிளகாய் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள 3 கொத்து கருவேப்பிலை,4 பச்சை மிளகாய் மற்றும் 1/2 தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு பவுலில் வடிகட்டிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் 1 கப் அரிசி மாவு,1/4 கப் உளுந்து மாவு,3/4 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி பெருங்காயத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை சாறை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும்.

அடுத்து முறுக்கு மிஷின் எடுத்து அதில் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளவும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள முறுக்கு மாவை சிறு உருண்டைகளாக பிடித்து அதில் போட்டு சூடேறிக் கொண்டிருக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிந்து விடவும்.

பின்னர் முறுக்கு இரு புறமும் வெந்து வரும் வரை காத்திருந்து எண்ணெய் வடித்து எடுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இவ்வாறு கருவேப்பிலை முறுக்கு செய்தால் மிகவும் சுவையாகவும்,வாசனையாகவும் இருக்கும்.