“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

0
67

“மூன்று ஸ்பின்னர்கள் தேவையில்லை… இவர் இருந்திருக்க வேண்டும்” – இந்திய முன்னாள் பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 15 பேர் கொண்ட அணி உலகக்கோப்பைக்காக சென்றுள்ளது.

இந்த தொடருக்காக சென்றுள்ள இந்திய அணியில் பலவீனமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். பந்துவீச்சில் பூம்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளது பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த தொடருக்கு இந்திய அணியில் அஸ்வின், சஹால் மற்றும் அக்ஸர் படேல் என மூன்று சுழல்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் சுழல்பந்து வீச்சு எடுபடாது  என முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “உம்ரான் மாலிக் உற்சாகமானவர், அவருக்கு வேகம் கிடைத்துள்ளது. மேலும் சரியான வகையான களங்களைக் கொடுத்தால் அவர் ஐபிஎல்லில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் விக்கெட்டுகளை கருத்தில் கொண்டு இந்தியா அதிக சுழற்பந்து வீச்சாளர்களை ஏற்றிச் சென்றதாக உணர்கிறேன். உம்ரான் மாலிக் போன்ற ஒருவர் அணிக்கு சிறந்த காம்ப்ளிமெண்ட் வீரராக இருந்திருப்பார்,” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து “ஆஸி மைதானங்களில் பவுன்ஸ் இருக்கிறது, மைதானங்கள் பெரியவை. சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் மிக முக்கிய பங்கு வகிக்கலாம். ஆனால் மூன்று ஸ்பின்னர்கள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு கட்டத்திலும் நீங்கள் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே வைத்து விளையாடுவீர்கள், இல்லையெனில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். மூன்று ஸ்பின்னர்கள் அதிகம். அதனால்தான் ஒரு ஸ்பின்னருக்குப் பதிலாக உம்ரான் மாலிக்கை தேர்வு செய்திருந்தால் மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்கும் என்று நான் சொன்னேன், ”என்று அவர் கூறினார்.