இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

0
226

இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்:! கலாம் என்ற கலங்கரை விளக்கம்!

தூங்காமல் கனவு காணுங்கள் உங்கள் லட்சியம் உங்களை தூங்க விடாது, இந்தியாவின் வளர்ச்சி நமது இளைஞர்கள் கையில் என இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த இளைஞர்களின் எழுச்சி நாயகனான டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று (உலக மாணவர்கள் தினம்).இன்றைய நன்னாளில் அவரின் சிறப்புகளையும் செயல்களையும் ஒரு கட்டுரையில் சொல்ல அடங்காது.எனினும் இந்த நல்ல நாளில் அவரை நினைவூட்டும் வகையில் அவரின் சிறப்புகளை சுருக்கமாக இந்த பதிவில் காணலாம்.

அப்துல் கலாம் அவர்கள் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு தடைகளை சந்தித்து பள்ளி படிப்பையும் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தையும் பெற்றார்.
அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு வானூர்தி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை அறிவியலாளராக பணியில் சேர்ந்தார்.இவர் தலைமையில் உருவாக்கப்பட்ட அக்னி 1 என்ற ஏவுகணை,இந்திய நாட்டின் சிறப்பு,பல்வேறு முன்னோடி நாடுகளும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்தது.மேலும் பின் நாட்களில் தயாரிக்கப்பட்ட அனைத்து அக்னி ஏவுகணைகளுக்கும் முன்னோடியாக இருந்தது.இதன்பிறகு பொக்ரான்- 2 அணு ஆயுத சோதனையின் போது கலாம் அவர்களின் தொழில்நுட்ப பங்கு,அவரை இந்தியாவின் சிறந்த அணு அறிவியலாலறாக எடுத்துரைத்தது.இந்திய பாதுகாப்பு விண்வெளி ஆராய்ச்சியில் கலாம் அவர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தலைவர் ஆனார்.இவரின் ஏழ்மை பண்பின் காரணமாகவும் நேர்மையின் காரணமாகவும் இவரை மக்கள் குடியரசுத் தலைவர் என்று அனைவராலும் அன்போடு போற்றப்பட்டவர்.
அவர் இளம் வயது உடைய உயர்நிலை பள்ளி மாணவர்களுடன் இருக்கும் பொழுது நான் மிகவும் மகிழ்வாக உள்ளேன் என்றும் அவர்களின் கற்பனை திறனை வளர்த்து,இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இவர்களை தயார் செய்வேன் என்று கூறியவர் அப்துல் கலாம்.

கனவு காணுங்கள்,தோல்வியே கற்றதலின் முதல் படி,இளைஞர்கள் என்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்,இந்திய நாடு இளைஞரான உங்கள் கையில்,இது போன்ற எண்ணற்ற அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிய அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 25ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே அவரின் உயிரை பறித்து,மானிடர்களுக்கு துரோகம் செய்தார் இறைவன்.

இளைய தலைமுறையை தனது மூச்சாக நினைத்த அவர்,அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே தனது உயிரை நீத்தார்.இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷன் பாரத ரத்னா பத்ம விபுஷன்போன்ற ஏராளமான விருதுகளையும் வாங்கி உள்ளார்.மேலும் மாணவர்களுக்காக அக்னி சிறகுகள் மற்றும் இந்திய 2020 இன்னும் நூல்களையும் எழுதியுள்ளார்.

இப்பேற்பட்ட கலங்கரை விளக்கம் பிறந்த தினத்தில்,இன்றைய இளைய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிகளுக்கும்,அப்துல் கலாம் அவர்களின் சிறப்பை எடுத்துரைத்து,இந்தியாவை வல்லரசாகவும் என்ற அவரின் கனவினை நாம் நிறைவேற்ற முயற்சி செய்வது இன்றைய இளைஞர்களின் தலையாய கடமையாகும்.
இளைஞர்களுக்காகவே வாழ்ந்த கலாம் என்னும் கலங்கரை விளக்கத்திற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

author avatar
Pavithra