தமிழகத்தில் உண்மையிலேயே பெண்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

0
79

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் சைதை சாதிக் இவர் கடந்த 26 ஆம் தேதி ஆர் கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பாஜகவின் பெண் நிர்வாகிகளும், நடிகைகளும் ஆன குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரஹராம் வெளியிட்டவர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசினார் அவர் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப்பரவியது.

இந்த நிலையில், திமுக நிர்வாகி சைதாஸ் சாதிக் என்பவர் மகளிர் அணியை சார்ந்த நிர்வாகிகளை தவறாக பேசியதை கண்டித்து பாஜகவினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டனர்.

காவல்துறையின் முன் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் விடுவித்தனர். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பெண்களை தரக்குறைவாக விமர்சித்த திமுக நிர்வாகியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளது சர்வாதிகார செயல் என விமர்சனம் செய்துள்ளார்.

பெண்களுக்காக ஆட்சி நடப்பதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்து வருகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய அண்ணாவலை அரசின் இயலாமையை தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜகவினர் மீது தமிழ்நாடு முழுவதும் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படும் நிலை இருக்கிறது. ஆனால் திமுகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று குற்றம் சுமத்தினால் திமுக நிர்வாகி மைனாரிட்டி சமூகத்தைச் சார்ந்தவர் என்றால் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.