அவர் செருப்புக்கு கூட தகுதி இல்லாதவர்! பிடிஆர்ஐ சரமாரியாக விமர்சித்த அண்ணாமலை!

0
78

தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கும், மாநிலத்திற்கும், சாதகேடு என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய சூழ்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள். பாஜகவிலிருந்து மாவட்ட தலைவராக இருந்து வந்த சரவணன் விலகினார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஆடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவியது.

சர்ச்சை ஆடியோ குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை திமுகவைச் சார்ந்தவர்கள் ஆடியோவை எடிட் செய்திருப்பதாக கூறினார் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் முன்னோர்களின் பெயரை கொண்டு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் அவருடைய கூட்டமும் வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தானாக உருவாகி இருக்கும் ஒரு விவசாயின் மகனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

பெரிய பரம்பரையில் வெள்ளி கரண்டியுடன் பிறந்ததைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறு எதையும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்யவில்லை எனவும், அவர் அரசியலுக்கும், மாநிலத்திற்கும், சாபகேடு எனவும், அண்ணாமலை சாடியிருக்கிறார். அதோடு, இல்லாத ஒன்றை இட்டுக்கட்டும் பழனிவேல் தியாகராஜன் அளவிற்கு தரம் தாழ விரும்பவில்லை எனவும், காட்டமாக பதிவு செய்துள்ளார். தன்னுடைய செருப்புக்கு கூட பழனிவேல் தியாகராஜன் நிகரில்லை என்று மிகக் கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கின்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது போன்ற கீழ்த்தரமான அண்ணாமலையும், மனநலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் கேள்வி எழுப்பப்பட்ட மற்றொரு நபரும் தான் தமிழ் சமூகத்தின் மீதான சபைக்கேடு எனவும், ஆனால் அந்த சாபம் பாஜகவின் மீதுதான் எனவும், பதிவு செய்துள்ளார்.