கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

0
81

கருப்பட்டி தோசை ! ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி நான்கு கப் பச்சரிசி இரண்டு கப் , உளுத்தம் பருப்பு ஒன்றரை கப் ,வெந்தயம் இரண்டு டீஸ்பூன் ,கருப்பட்டி ஒன்றரை கிலோ ,தேங்காய் துருவல் ஒரு கப் , ஏலக்காய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் , சுக்குப்பொடி ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்கடலை இரண்டு கப்.
செய்முறை :
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். அதனை அரைத்து ஒன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கலக்கிய மாவைக் குறைந்தது பத்து மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு, அதில் கருப்பட்டியைப் பொடித்துப் போட்டு, நன்கு கரைத்து வடிகட்டி, அந்தக் கரைசலை லேசாக கொதிக்க வைக்க வேண்டும்,அதனையடுத்து அதனை ஆற வைக்க வேண்டும். பிறகு ஆறவைத்த கருப்பட்டி தண்ணீரூடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து தோசை மாவில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக் கல் சூடானதும், எண்ணெய் தேய்த்து, மாவை கனமாக ஊற்றி, பொடித்த வேர்க்கடலையை அதன் மீது போட்டுப் பரப்பி விட வேண்டும், கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து, வேகவிட்டு எடுக்க வேண்டும். இதோ உடனடியாக ருசியான கருப்பட்டி தோசை தயார் ஆகிவிடும்.

 

author avatar
Parthipan K