சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

0
109

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன.

இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசே‌ஷ தீபாராதனை காட்டப்பட்டது . நாளை 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறும்.

இதே போல் பிரசித்திபெற்ற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி, நாள்தோறும் அதிகாலை 4 மணி முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று சூரிய கிரகணம் என்பதால், கோயில் நடை சாத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோயில் நடையும் சாத்தப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.

சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நடையும் அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் நடை திறக்கப்பட்டது.

author avatar
CineDesk