மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

0
32
#image_title

மாணவர்கள் தூங்குவதற்கு தனியாக பீஸ் கட்ட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்ட பள்ளி!!! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!!

சீனா நாட்டில் மழலையர் தொடக்கப்பள்ளி ஒன்று மாணவர்களை தூங்க வைப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்து தற்பொழுது அது தொடர்பான அறிவிப்பை பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் உலகத்தில் பலவிதமான பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றது. இதுவரை நிறைய பள்ளிக்கூடங்களில் புத்தகங்களுக்கு கட்டணம், நோட்டுகளுக்கு கட்டணம், மாதத்திற்கு ஒரு முறை கட்டணம், சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு என்று பல கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவில் தொடக்கப்பள்ளி ஒன்று குழந்தை மாணவர்களை தூங்க வைக்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

சீனா நாட்டின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று மாணவர்கள் மதிய உணவு அருந்தியதற்கு பிறகு அவர்களை தூங்க வைப்பதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவிப்மை குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக தொடக்கப்பள்ளி வெளியிட்டுள்ள அறிவிப்பு குறுஞ்செய்தியில் “மதிய உணவு முடிந்த பிறகு மாணவர்களை தூங்க வைக்க கட்டணம் வசூலிக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்கள் பள்ளி மேஜையின் மீது தலைவைத்து தூங்குவதற்கு இந்திய மதிப்பில் 2275 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் பள்ளி வகுப்பறையின் தறையில் படுத்து தூங்குவதற்கு 4049 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மிக வசதியாக மாணவர்கள் மெத்தையில் தூங்க வேண்டும் என்றால் 7856 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளியின் இந்த முடிவு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூங்குவதற்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அந்த பள்ளி நிர்வாகம் “வகுப்பில் தூங்க விருப்பம் இல்லாத மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு செல்லலாம். மாணவர்கள் தூங்கும் பெழுது ஆசிரியர்கள் அவர்களை கவனித்துக் கொள்கிறார்கள். அதற்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுதின்றது” என்று கூறியுள்ளது.