வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 

0
95
#image_title

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!!

தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு வீட்டிற்கு இரண்டு வாகனம் என்று எல்லாம் இப்போ வாங்குகிறார்கள். அந்த வாகனங்களின் விலை பற்றிய தகவல்கள் சிலருக்கு தெரிவதில்லை. மேலும் ரோடு டாக்ஸ் கட்டுவது எப்படி எதற்காக கட்டுகிறோம் என்றெல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள்.

ஒரு ஷோரூமில் வண்டியை வாங்கினோம் என்றால் அந்த வண்டியின் விலை என்ன ரோடு டாக்ஸ் எவ்வளவு இன்சூரன்ஸ் எவ்வளவு இதெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் வண்டிற்கு பொதுவாக அவர்கள் பில் தருவார்கள். அதில் எக்ஸ் ஷோரூம் ப்ரைஸ், ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ், இன்சூரன்ஸ், ஆர்எஸ்ஏ, இடபிள்யு, ஆக்சிசரீஸ் இது போன்ற தகவல்கள் அதில் இருக்கும்.

அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்

1.எக்ஸ் ஷோரூம் ப்ரைஸ் என்பது கடையில் நீங்கள் வாங்கிய வண்டியின் விலை. 2.ரெஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் என்பது ஆர்டிஓ வாங்க கூடிய சார்ஜ் மற்றும் ரோட் டாக்ஸ் இவைகள் எல்லாம் இதில் அடங்கும்.

3.இன்ஷூரன்ஸ் என்பது வண்டிற்கு 5 ஆண்டுகள் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4.ஆர்எஸ்ஏ என்பது ரோடு சைட் அசிஸ்டன்ட் இதனை நீங்கள் வண்டியில் செல்லும்போது ஏதேனும் வண்டியில் கோளாறு ஏற்பட்டால் ஷோ ரூமிற்கு கால் செய்து அசிஸ்டன்ட் வர வைத்து சரி பண்ணி தரப்படும்.

5. இடபள்யூ என்பது உங்களது வாரண்டியை அதிகப்படுத்த இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. ஆக்சிசரீஸ் என்பது வண்டிற்கு தேவையான கண்ணாடி, ஹாரன் போன்ற எக்ஸ்ட்ரா ஏதேனும் வேண்டுமென்றால் அதற்கான விலை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ் ஷோரூம், ரிஜிஸ்ட்ரேஷன் சார்ஜ் இன்சூரன்ஸ் இவைகள் முக்கியமான ஒன்றாகும் அதன் பின் ஆர்எஸ்ஏ, இடபிள்யு, ஆக்சிசரீஸ் இவைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் மட்டும் பணம் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இன்சூரன்ஸ் என்பது ஸ்டேட் கவர்மெண்ட் சாலை  பராமரிப்பிற்கு வாங்கப்படும் சார்ஜ் ஆகும்.

மேலும் நீங்கள் வண்டி வாங்கி ஒரு மாதம் பயன்படுத்திய பின் பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் ரோட் டாக்ஸ் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆர்டிஓ ஆபீஸ் சென்று நான் வண்டியை பயன்படுத்தி ரொம்ப வருடங்கள் ஆகிறது.

தனது ரோட் டாக்ஸ் திரும்ப வேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் அவர்கள் பரிசோதித்துப் பார்த்த பின் தருவார்கள். இந்த தகவலை வண்டி வாங்க போறவங்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

author avatar
Jeevitha