ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

0
125
#image_title

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

இப்போது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் இணைப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனர் நுழைவின் உள்ளே சென்று நமது ரேஷன் அட்டையில் கொடுத்திருக்கும் எண்ணை அதில் போட வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை டைப் செய்து பதிவை தர வேண்டும். பிறகு நம் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்து பதிவு செய்யும்போது நம் ரேஷன் அட்டையின் அனைத்து விவரங்களும் வந்துவிடும். பிறகு அதில் உள்ள குடும்ப உறுப்பினர்களை கிளிக் செய்து அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

அதன் பக்கத்தில் நாம் ஆதார் கார்டை இணைத்து இருந்தால் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்குகள் குடும்ப உறுப்பினர்களின் பக்கத்தில் காட்டும். அப்படி இணைக்கவில்லை என்றால் ஆதார் எண்ணின் இலக்குகள் அங்கு இருக்காது. எனவே அதன் பக்கத்தில் உள்ள செக் பாக்ஸை கிளிக் செய்து நம் ஆதார் எண்ணை நாமே இணைத்துக் கொள்ளலாம்.

எனவே ரேஷனையும் ஆதார் அட்டைகளையும் இணைப்பு செய்யாமல் இருப்பவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ரேஷன் கடையில் உங்களுக்கு பொருட்கள் இல்லை என்று சொன்னால் இனிமேல் இப்படி செய்யுங்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெறும் பத்து ரூபாய் செலவில் அனைத்து அரசு துறைகளில் இருந்தும் நமக்கு தேவையான தகவல்களை நாம் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். இந்த தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 2 (j) யின் கீழ் ரேஷன் கடையில் பராமரிக்கும் பத்திரங்கள், என்னென்ன பங்குகள் உள்ளது, எவ்வளவு பங்குகள் உள்ளது, மேலும் வரவு செலவு கணக்கு முதலியவற்றினுடைய அனைத்து பத்திரங்களையும் நாம் பார்க்கலாம்.

மேலும் அதை நகலாகவும் எடுத்துக் கொள்ள இந்த தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நமக்கு உரிமை உள்ளது. இதற்கு முதலில் கடிதம் ஒன்றில் அனுமதி வாங்க வேண்டும். இதன் மூலம் அனுமதி பெற்று விட்டால் பஞ்சாயத்து அலுவலகம், கார்ப்பரேஷன் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் தாலுகாவிலும், கூட்டுறவு வங்கிகளுக்கும் சென்று அனைத்து பத்திரங்களையும் நாம் ஆராயும் உரிமை உள்ளது.

மேலும் இதுபோன்ற விவரங்களை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஒரு புத்தகம் உள்ளது .அதில் இதற்கு எப்படி மனு எழுதுவது, தகவல் எப்படி கேட்பது, கேட்ட தகவல் கிடைக்கவில்லை என்றால் அதற்கு எப்படி 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்பது போன்ற விவரங்களை இந்த புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் உங்கள் வீட்டில் முன்பு ஒரு அடிப்படை வசதிகள் செய்யப் போகிறார்கள் என்றால் அதை செய்திருந்தால் எவ்வளவு செலவாகி இருக்கிறது அதை செய்யாவிட்டால் ஏன் செய்யவில்லை என்பதை தெரிந்து கொள்ள இந்த தகவல் அறியும் சட்டத்தில் இடம் உள்ளது.

இதை அனைத்தையும் இந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த புத்தகத்தில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்வதால் முக்கியமான அரசுஅதிகாரிகளின் தொலைபேசி எண்ணையும் அறிந்து கொள்ளலாம்.

author avatar
CineDesk