வாட்ஸ் அப்பில் வந்த காலண்டர் ஐகான் அப்டேட்! இதனை கிளிக் செய்தால் பழைய மெசேஜ்களை உடனே படிக்கலாம்!

0
128

வாட்ஸ் அப்பில் வந்த காலண்டர் ஐகான் அப்டேட்! இதனை கிளிக் செய்தால் பழைய மெசேஜ்களை உடனே படிக்கலாம்!

வாட்ஸ் அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு பல புது வித அம்சங்களை தற்போது வரை வெளியிட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை அனுப்பிய குறிப்பிட்ட நொடியில் கூட நிறுத்திக் கேட்கலாம் என்ற அப்டேட்டை வெளியிட்டது.

அதேபோல புதிய வகை எமோஜிகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது பழைய மெசேஜ்களை மீண்டும் படிக்கும் வசதியை வெளியிட உள்ளது. இதற்கு காலண்டர் ஐகான் என்று பெயர். டெலிட் ஆன பழைய மெசேஜ்களை திரும்பி எடுத்து படிக்க இந்த காலண்டர் ஐகான் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஓர் தனிநபர் செய்யும் சாட்டில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மெசேஜை படிக்க வேண்டும் என்றால் அந்தப் பக்கத்திற்கு சென்று காலண்டர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்து, தேதியை குறிப்பிட்டால் அதற்கான மெசேஜ்கள் காட்டப்படும். அவ்வாறு காலண்டர் வேண்டாம் என்றால், அந்த சாட் பக்கத்திற்கு சென்று ஸ்கிரோல் செய்தால் அந்த காலண்டர் ஐகான் மறந்துவிடும் எனக் கூறியுள்ளனர்.

இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களுக்கு எப்பொழுது செயலுக்கு வரும் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிடவில்லை.