மணமேடை வரை வந்த மணமகன்! தாலி கட்டும் கடைசி நொடியில் உண்டான அதிர்ச்சி பரிதாப நிலையில் மணமகன்!

0
64

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண் துருத்தி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணம் இரட்டக் குளங்கரை பகுதியிலிருக்கின்ற கோவில் மண்டபத்தில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தன.

திருமணம் நடைபெறுவதற்கான நாளும் வந்தது திருமண மண்டபத்தில் உறவினர்கள் நண்பர்கள் என்று ஏராளமான ஒரு சூழ்ந்திருந்த சமயத்தில் மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார். மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

மணமகன் அருகில் நிற்கவைத்து அவர் கழுத்தில் மாலையைப் போட தெரிவித்தார்கள். மாப்பிள்ளையும் மாலையை மணமகளுக்கு அணிவிக்கச் சென்றார். அந்த சமயத்தில் மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். அதன்பிறகு திடீரென்று மனமேடையிலிருந்து கீழே இறங்கி சென்று விட்டார் மணமகள்.

உறவினர்கள், குடும்பத்தினர்கள், எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். மணமகளை தடுத்து நிறுத்த முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை மணமகள் அறைக்குள் சென்று உள்புறமாக பூட்டி கொண்டார். இதனால் திருமண மண்டபமே அதிர்ச்சியில் உறைந்து போனது.

எவ்வளவு கதவு தட்டப்படும் அந்த பெண் கதவை திறக்கவில்லை, இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர் அப்போது தான் மணமகளின் காதல் விவகாரம் தெரிய வந்தது.

அதாவது அவர் மற்றொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், அந்த பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

அதன்பிறகு இரு வீட்டாரையும் அழைத்து காவல்துறையினர் சமாதானம் செய்தார்கள். ஆனால் அப்போது மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியுடன் இருந்து விட்டார்.

கடைசியாக பெண் வீட்டை சேர்ந்தவர்கள் மணமகன் வீட்டாருக்கு நஷ்டயீடு கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து மண்டபத்திலிருந்து அனைவரும் வெளியேற தொடங்கினார்கள். அப்போது காவல்துறையினர் திருமணத்தில் விருப்பமில்லை என்றால் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்க வேண்டும்.

சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரையில் அழைத்து வந்து இப்படியெல்லாம் அவமானப்படுத்தக் கூடாது என்று மணப்பெண்ணுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.