இரவின் நிழல் படத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு… கடைசி நேர சிக்கல்!

0
114

இரவின் நிழல் படத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு… கடைசி நேர சிக்கல்!

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்து வருபவர். கடைசியாக அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அவர் மட்டுமே நடித்த படம். இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதற்காக இந்தப் படம் ஆசிய சாதனை புத்தகத்திலும் மற்றும் இந்திய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று வரவேற்பை பெற்று, பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த வகையில், இரண்டு தேசிய விருதுகளை இந்த படம் வென்றுள்ளது. இந்திய அரசின் தேசிய விருதுகள் போட்டியிலும் நடுவர்களின் சிறப்புப் பரிசை பெற்றது.

இதையடுத்து இப்போது இரவின் நிழல் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ஒளிப்பதிவு சாதனங்கள் வாடகைக்கு எடுத்தவகையில் பாக்கி 25 லட்ச ரூபாய்க்கு மேல் இருப்பதால் அதைக் கட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பாஸ்கரராவ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்மந்தமாக பதிலளிக்க சொல்லி நீதிமன்றம் பார்த்திபனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.