வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே வெற்றி வாகை சூடினார் அதிமுக வேட்பாளர்?

தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் இரண்டாம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராமலிங்கம் அவர்களும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும், போட்டியிட்டனர். இந்த சூழ்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன்னரே அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் வெற்றி பெற்றதாக தெரிவித்து காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட … Read more

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையுமில்லாமல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. அதேபோல மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்ததால் அந்தத் தேர்தல் … Read more

முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது. இந்தநிலையில், நோய் தொற்று காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த ஒரு தொய்வும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் … Read more

நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை? உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட புதிய வழக்கு!

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் முழுமையாக தேர்தல் முடிந்து விட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் இன்றைய தினம் கடைசி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உயர் நீதிமன்றம் தற்போது நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு தேர்தல் ஆணையமும் ஒரு காரணம் தேர்தல் பரப்புரையின் போது மாநாடுகளை ஏன் தடுக்கவில்லை. அது தொடர்பான விளக்கத்தை 30-ஆம் தேதிக்குள் அளிக்க … Read more

முடிந்தது தேர்தல்! வெளியாகிறது கருத்துக் கணிப்புகள்!

இன்று மாலை ஏழு மணியுடன் மேற்கு வங்காளத்தில் எட்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் எனப்படும் கருத்துகணிப்பு இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம், புதுவை, அசாம், கேரளா, ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், … Read more

விடாமல் துரத்தும் நோய் தொற்று! மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மற்ற நாடுகளை விடவும் இப்போது நம்முடைய நாட்டை விட மிக அதிகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது ஆகவே அதற்கான பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் இந்த நோய்த்தொற்று மிகத் தீவிரமாக இருக்கும் சுமார் 150 மாவட்டங்களில் மீண்டும் முழு … Read more

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்!

karnataka corona

கர்நாடகாவில் நேற்று 39047 பேருக்கு கொரோனா! பெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை! அதிர்ச்சித் தகவல்! தென்னிந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக இருப்பது கர்நாடகா. அங்கு நாள்தோறும் 30 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், நேற்று 39,047 பேருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 229 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், பெங்களூர் நகரில் மட்டும் நேற்று 22,596 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 … Read more

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்!

teacher

ஆசிரியர்ளுக்கு நற்செய்தி! மே 1ம் தேதி முதல் பள்ளிக்கூடம் வரவேண்டாம்! தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் இதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 2021-21ஆம் கல்வி ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட்-19 … Read more

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது!

tn corona cases

தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 1,25,004 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 16,665 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், நெல்லையில் 714 பேரும் அதிக அளவாக … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more