முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டது.தற்பொழுது நீலகிரி உள்ளிட்ட மலையோரம் மாவட்டங்களுக்கு மேலும் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நேற்று விடப்பட்ட ரெட் கலர் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. கோவை ,தேனி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலங்களிலும் கன … Read more

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணி தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால்,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு கூட்டணி தொடருமா? என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரம் மாதம் நடைப்பெற்றது.இதில் அதிமுக சார்பில் 3 … Read more

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு!

குப்பை தொட்டி அருகே கருகிய நிலையில் ஆண் சடலம்! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டத்தில் கணபதிபுரம் என்ற பகுதியில் குப்பை தொட்டிக்கு அருகே ஆண் சடலம் ஒன்று எரிந்து கருகிய நிலையில் கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியுற்று இருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் கணபதிபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியில் ஏதோ கருகும் துர்நாற்றம் வீசி இருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் போய் அந்த பகுதியில் பார்க்கும் பொழுது குப்பைத் … Read more

கோழிக்கோடு விமான நிலையம் மூடப்படுகிறது?

துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்பொழுது இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் சிவிஆர் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த சிவிஆர் கருவில் விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த உரையாடல் மற்றும் விமானத்தின் கருப்பு பெட்டியை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க … Read more

மேட்டூர் அணையின் நீர்வரத்து மற்றும் நீர் இருப்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கர்நாடகா கேரளா மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் பாதுகாப்புக்கு ஏற்ப நீரின் அளவும் அதிகமாகவே திறந்து விடப்பட்டுகிறது. தற்பொழுது வரை கர்நாடக அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து 40 ஆயிரம் … Read more

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு!

ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 5 அடி உயர்வு! தொடர் மழையின் காரணத்தால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி நீர் வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்புகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக அதிக மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. கபினி அணை, கிருஷ்ணராஜ ஆகிய அணைகளுக்கு வரும் நீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருகின்றது. … Read more

கோழிக்கோடு விமானத்தில் பயணித்த ஒருவருக்கு கொரோனா:? அச்சத்தில் மீட்புக்குழுவினர்?

துபாயிலிருந்து 191 பயணிகளுடன் கோழிக்கோட்டை வந்தடைந்த விமானம் விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகளுடன் இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, விமான விபத்தில் உயிரிழந்த … Read more

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!

தஞ்சையிலுள்ள அரசுதவி பெரும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா 25 லட்ச ரூபாய் நிதியுதவியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்  வழங்கியுள்ளார். குழந்தைகளைக் காப்பதற்காக மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், குழந்தைகள் வார்டுகளில் சீரமைப்பு பணிகளுக்கான தொகையாக ரூ. 25லட்சம் பணமாகவும் வழங்கி ஜோதிகா அவர்கள் உதவியுள்ளார். தமிழகத்தின், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்தலோசித்த பிறகு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர்  மருது துரை அவர்களின்  ஒப்புதலின் … Read more

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு!

நாளை மாலை 6 மணிக்கு தமிழக மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்! பாஜக அழைப்பு! நாளை மாலை 6 மணிக்கு முக்கிய அழைப்பை பாஜகவும் இந்து முன்னணி அமைப்பும் தமிழக மக்களுக்கு விடுத்துள்ளது. கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வந்த விமர்சனங்கள் பற்றிய சர்ச்சைகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.அதில் நமது புராணங்களையும், கந்தர் சஷ்டிக் கவசத்தையும் பற்றி தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வந்தனர். கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவர்கள், அதில் ஆபாச … Read more

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் சிவிஆர் கருவி கண்டுபிடிப்பு?

வெளிநாடு வாழும் இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் துபாய் சென்றது.நேற்று மாலை 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 6 சிப்பந்திகள் என மொத்தம் 191 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்திலேயே தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்தது.இவர்களைத் தொடர்ந்து தேசிய மீட்பு குழு படையினரும் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு … Read more