ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

0
139

ரத்த சோகை ஏற்பட காரணம்! சரி செய்ய இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது ரத்த சோகை. ரத்த சோகை ஏற்பட பல்வேறு வகையான காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.இதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

புதிய சிவப்பணுக்கள் உருவாவதற்கான சத்துக்கள் நம் உடலில் குறைந்த இருப்பதனால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. நம் உடலில் புதிய சத்துக்கள் உருவாவதற்கு பல்வேறு வகையான உணவு முறைகள் உள்ளது. தேவைப்படும் சத்துக்கள் இரும்புச்சத்து, வைட்டமின் சி, போலிக் அமிலம், வைட்டமின் பி12, புரதம், சத்துக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்தால்தான் நம் உடலில் புதிய சிவப்பு அணுக்கள் உருவாகும்.

சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து தினந்தோறும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் ரத்த அணுக்களும் சீராகும், ரத்த சோகையும் குணமாகும். இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள். கருப்பு உலர் திராட்சை. அதிகப்படியான இரும்பு சத்தும், பொட்டாசியம் அடங்கியுள்ளது.

ஹீமோகுளோபின் அதிகரிக்க வேண்டும் என்றால் ஒரு கைப்பிடி கருப்பு திராட்சையை இரவு தூங்க செல்வதற்கு முன்பே தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு திராட்சையையும் திராட்சை ஊரின நீரையும் மிக்ஸியில் அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

கருப்பு உலர் திராட்சையை தொடர்ந்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்கள் அதிகளவு அதிகரிக்கும். அடுத்ததாக மாதுளை. மாதுளையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான விட்டமின்களும், மினரல்களும் உள்ளது.

அதிலேயே ஜூஸாக அரைத்தும் சாப்பிடலாம். பீட்ரூட் ஜூஸ் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்துள்ளது. பீட்ரூட்டை மதிய உணவுகளில் பொருளாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக ஆட்டு ஈரல் இதில் அதிக அளவு புரதம், விட்டமின் பி12 அடங்கியுள்ளது. முருங்கைக்கீரை இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது அதனால் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.

author avatar
Parthipan K