பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

0
113

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு என்பது தற்போதுள்ள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிதிப்பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை உள்ள ஆவணங்களில் பேன் கார்டும் ஒன்றாக உள்ளது.

பான் கார்டில் புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளை முறையாக செய்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதனை செய்ய தவறும் பொழுது அரசின் நலத்திட்டங்கள் நமக்கு கிடைப்பதில். பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்படுகின்றது. தற்போது வருமானவரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அதற்காக மத்திய அரசு கொடுத்துள்ள கால அவகாசத்திற்குள் பான் கார்டை ஆதாரங்களுடன் இணைக்க வேண்டும் .அவ்வாறு செய்யவில்லை என்றால் பல்வேறு சிக்கலை சந்தித்து அதனை சரி செய்வதற்கு நாம் அலைய வேண்டியது இருக்கும்.

பான் கார்டு என்றால் நிரந்தர கணக்கு எண். இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவதற்கும் வழங்கப்படுகின்றது. பான் என்பது ஒரு மின்னணு அமைப்பாக கூறப்படுகிறது. இதன் மூலம் தனிநபர் நிறுவனத்திற்கான அனைத்து வரி தொடர்பான தகவல்களும் ஒரே பானில் பதிவு செய்யப்படும்.இந்நிலையில் தற்போது பான் கார்டு தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பான் கார்டுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும். இது குறித்து வருமான வரித்துறை பலமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெரும்பாலானோர் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதினால் பல்வேறு சிக்கல்கள் சந்திக்க நேரிடும் அதனால் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வருமான வரத்துறை வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் வருமான வரிச் சட்டம் 1961 ன்படி விளக்க அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.03.2023 எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும்.01.04.2023 ஆதார் உடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என தெரிவித்துள்ளனர்.

 

author avatar
Parthipan K