காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!

0
42
#image_title

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபார்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார்.

தற்பொழுது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களில் காவிரி நதிநீர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதே போல கர்நாடகத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

மத்தியில் எதிர்கட்சிகளின் கூட்டணி அமைப்பான இந்தியா அமைப்பில் காங்கிரஸ் மற்றும் தமிழகம் கட்சிகளும் உள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக கட்சி தமிழகத்தில் கூட்டணி வைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. ஆனால் கர்நாடகத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தர மறுத்து வருவது புரியாத புதிராக இருக்கின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காவிரி நதி நீர் பிரச்சினையில் இந்தியா கூட்டணியில் எதிர்கட்சிகளுக்குள் சண்டை நிலவி வருகின்றது என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபர்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசினார். அப்போது அவர் “காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக இரண்டு மாநிலங்கள் சண்டை போட்டு வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் எதிர்கட்சிகளின் கூட்டணி அமைப்பான இந்தியா கூட்டமைப்பில் இருக்கின்றது.

ஆக எதிர்கட்சி கூட்டணியில் இருக்கும் இரண்டு ஆளுங்கட்சிகளும் காவிரி நீருக்காக சண்டையிட்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் நதி நீர் பிரச்சனை தொடர்பாக இதுவரை எந்தவொரு பிரச்சனையும் இதுவரை ஏற்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தை கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு சீரழித்து விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவது வோதனையை அளிக்கின்றது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் அதிகரித்து விட்டது. இதற்குத்தான் நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டீர்களா? ராஜஸ்தான் முதலமைச்சர் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார்” என்று கூறியுள்ளார்.