1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!! 

0
36
change-in-provision-of1000-per-month
change-in-provision-of1000-per-month

1000 Rs Scheme: பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. உரிமைத்தொகை ரூ 1000 வழங்குவதில் சிக்கல்!!

சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதாக தெரிவித்தது. அவ்வாறு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் மேலாகி கடந்த அண்ணா பிறந்தநாள் அன்று தான் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல் மக்களிடமிருந்து பல புகார்கள் அடுத்தடுத்து முன்வைக்கப்பட்டது.

அனைத்து மகளிருக்கும் ஆயிரம்  என்று கூறிவிட்டு குறிப்பிட்டவர்களுக்கு தான் வழங்கப்படும் எனக் கூறியதை மக்கள் பெரிதும் கண்டித்தனர். மேற்கொண்டு இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்து பலரது கணக்கிலும் ரூபாய் ஆயிரம் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட ஒரு சிலருக்கு அவர்களின் தரவுகள் சரியாக இருந்தும் ஆயிரம் பணம் போடப்படவில்லை.

இவ்வாறான மக்களின் பல குறைகளை நிவர்த்தி செய்யவே மேல்முறையீடு என்ற ஒன்றை அறிமுகம் செய்தனர். தாங்கள் அளித்த தரவுகள் சரியாக இருப்பினும் பணம் வராதவர்கள் அல்லது தரவுகளில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த மேல்முறையீடு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினர். இந்த மேல்முறையீடுக்காகவே சிறப்பு அதிகாரியாக ஏஐஎஸ் நியமிக்கப்பட்டார்.

தற்பொழுது இவர் செய்யும் செயல்களை பொறுக்க முடியாமல் தான் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.அந்தவகையில் மேல்முறையீட்டு பணிகளை காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று மாலை 4 மணிக்கு மேல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். மக்கள் அன்றாடம் தங்கள் புகார்களை கூறும் பட்சத்தில் அதில் பல மாற்றங்கள் கொண்டு வருவது நல்லது.

இது குறித்து உயர் அதிகாரியிடம் கூறிய பொழுது சிறிதும் கூட செவி சாய்ப்பதில்லை. அவர் வரையறுக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளார். எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும் வரை காலவரையின்றி மகளிரின் உரிமை தொகை காண பணிகளை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் எந்த ஒரு நவடிக்கையும் எடுக்காவிட்டால் கட்டாயம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி அனைவரும் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி மேல்முறையீடு எனத் தொடங்கி இந்த உரிமை தொகையை தொடர்பான மக்களின் புகார்களை சரிபார்த்து கொடுக்க நிர்வாகிகள் இல்லாத பட்சத்தில் வருவாய் துறை அதிகாரிகள் இப்படி போராட்டம் நடத்துவது மேற்கொண்டு அரசுக்கு அழுத்தத்தையே கொடுக்கும்.

அதுமட்டுமின்றி இவர்களின் போராட்டத்தால் பெண்கள் செய்யும் மேல்முறையீடு விண்ணப்பம் சரிபார்க்க படாமல் கிடப்பில் போட்ட படியே இருக்கும்.இதனால் மகளிர் உரிமை தொகை வருவத்தில் சற்று தாமதம் ஏற்படலாம்.