அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!! 

0
38
#image_title
அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஆப்பிள்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பயனர்கள்!!!
ஆப்பிள் நிறுவனம் அடுத்ததாக புதிய ஐமேக் மற்றும் புதிய மேக்புக் புரோ போன்ற சாதனங்களை அடுத்து அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய சானங்களை ஸ்கேரி பாஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஸ்கேரி பாஸ்ட் என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த ஸ்கேரி பாஸ்ட் நிகழ்ச்சி அக்டோபர் 31ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் நடத்தும் இந்த ஸ்கேரி பாஸ்ட் நிழ்ச்சியில் புதிய மேக்புக் புரோ, புதிய ஐமேக் ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளது. இதனால் பயனர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் அவர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 24 இன்ச் கொண்ட புதிய ஐமேக் மாடலை வெளியிடவுள்ளதாகவும், புதிய மேக்புக் புரோ சீரிஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிகின்றது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு எம்.1 சிப்செட் கொண்ட 24 இன்ச் ஐமேக் மாடலை அறிமுகம் செய்திருந்தது. இதையடுத்து இந்த சிப்செட்க்கு அடுத்த பதிப்பாக அதிநவீன எம்.2 சிப்செட் கொண்ட  புதிய ஐமேக் மாடல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புராசஸர் 5 நானோமீட்டர் பாறையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து ஆப்பிள் நிகழ்வுகளும் நேரலை செய்யப்பட்டது. அந்த வழக்கப்படி இந்த ஸ்னேகா பாஸ்ட் நிகழ்வும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான வலைதளத்திலும், ஆப்பிள் டிவி செயலியிலும் நேரலை செய்யப்படவுள்ளது.