ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

0
65

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

தேசிய கண்தான தினம் நாளை அனுசரிக்க உள்ள நிலையில் தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தான படிவத்தில் கையெழுத்திட்டார்.

கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் தனது கண்களை தானம் செய்துள்ளதாகவும், இதேபோல் பொதுமக்கள் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரைக்கும் இரண்டு வாரங்கள் கண் தான தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய கண் தான தினம் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தலைமைக் செயலகத்தில் இன்று தேசிய கண் தானம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். கண்தானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாகவும், அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் முன்மாதிரியான செயலை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

மேலும் கண் தானம் வழங்குபவர்களுக்கும் கண் தானம் பெறுபவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இணையதளம் ஒன்றை நடைமுறைபடுத்தியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

https://hmis.tn.gov.in/eye-donor/ இந்த இணையதளம் மூலம், கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதிமொழியினை ஏற்ற பின்பு, அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சான்றிதழை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

author avatar
Kowsalya