இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

0
106

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை தமிழர்கள் மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு பிறகு இலங்கை தமிழர்கள் பலரும் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள்.
அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்கள் தேவைக்காக ஆங்காங்கே அகதிகள் முகாம் அமைக்கப்பட்டு அவர்கள் அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.அந்த முகாம்களில் இலங்கையிலிருந்து வந்த அகதிகள் வசித்து வருகின்றார்கள். இலங்கை அகதிகள் முகாமில் இருக்கின்ற வீடுகள் மற்றும் சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்த இருப்பதாக ஏற்கனவே பலமுறை முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அதோடு இலங்கை அகதிகள் முகாமில் இருக்கின்ற குழந்தைகள் கல்வி கற்க இயலாமல் அல்லாடி வருகிறார்கள். ஆகவே இலங்கை தமிழர்களின் முகாம்களை மேம்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முடிவை மேற்கொண்டு இருக்கின்றார்.அதாவது தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது, இலங்கை தமிழர்களுக்கு நியாய விலை கடைகளில் விலை இல்லாமல் அரிசி வழங்கப்படும். வருடம் தோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். கல்விக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் தமிழ்நாட்டில் இருக்கின்ற இலங்கை தமிழர்களின் முகாம்களில் வீடு மற்றும் சாலைகள் சீரமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இலங்கை தமிழர்களின் நலனுக்காக முகாம்களை மேம்படுத்துவதற்காகவும் வருடம் தோறும் ஆறு கோடி ரூபாய் என்று ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.ஆனால் தற்சமயம் இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு என்ன உதவிகள் செய்தாலும் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு எதிரான இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுகவை இதுவரையில் யாரும் மறக்கவில்லை என்பது தான் உண்மை.

இலங்கை மண்ணில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது அதனை அப்போதைய கருணாநிதி தலைமையிலான தமிழக அரசும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இலங்கை தமிழர்களுக்கு அப்படி ஒரு துயரமான சூழ்நிலை ஏற்பட்ட சமயத்தில் இங்கே மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கேட்டு வாரம் ஒருமுறை டெல்லிக்குச் சென்று வந்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

இலங்கை தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதரவு அளிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பு கொண்டு இருந்தது. என்ற காரணத்திற்காகவும், இலங்கை தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது அதனை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி.இப்படி பங்காளிகள் இருவரும் கைகோர்த்துக் கொண்டு இலங்கை தமிழர்களை பழிவாங்கும் விதமாக அவர்களுக்கு துயரம் ஏற்பட்ட போதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு தற்சமயம் பொதுமக்களிடம் பெயர் வாங்குவதற்காக இப்படி ஒரு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் என்பதை இலங்கை தமிழர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற போது ஏதோ பெயருக்காக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஒரு உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி அப்போது உண்ணாவிரதம் இருந்த புகைப்படம் தற்போது வரையில் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. காரணம் அப்போது அவர் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் குளிர்சாதன வசதியுடன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அதைக்கண்ட அனைவருக்குமே தெரியும் அது வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் என்று இப்படி ஒருபுறம் இலங்கை தமிழர்களை கொள்வதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்துவிட்டு மறுபுறம் தமிழர்களை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று திமுகவும், காங்கிரஸ் கட்சியும் மார்தட்டிக் கொண்டு இருக்கிறது கூடிய விரைவில் இவர்களின் முகத்திரைக் கிழிக்க படுமா?