இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

0
46
Co-operative banking service now looking for a home!! The public is happy!!
Co-operative banking service now looking for a home!! The public is happy!!

இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சேவைகளும் மிக எளிதான வகையில் அமைகின்றது.இன்று நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் நமது வீடு தேடி நம் கைகளுக்கே வந்து சேர்கின்றது.

இன்று உள்ள அனைவரும் வீட்டில் இருத்த படியே பொருட்களை வாங்குவது, உணவு உள்ளிட்டவற்றை  ஆடர் செய்வது போன்ற அனைத்திற்கும் எளிய முறையில் சேவை வந்து விட்டது.

இந்த சேவை கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. மக்கள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது தமிழக அரசு வீடு தேடி மருத்துவம், காய்கரிகள்,மருந்து பொருட்கள் , தினசரிக்கு வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்றவரை வீடு தேடிவந்து மக்களிடையே சேர்த்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தற்பொழுது வங்கி சேவை எளிதாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வீடு தேடி வங்கி என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைவார்கள் என்றும் திட்டமானது தமிழக கூட்டுறவு துறை சார்பாக செயல்படுத்தப்பட உள்ளது. இவற்றின் மூலமாக வங்கிகளில் இருந்து பெறப்படும் பயிர் கடன் ,நகை கடன் போன்ற 17 வகையான கடன்கள் பெறமுடியும்.

இது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை மூலம் கூட்டுறவு வங்கி சார்பில் கடன் வழங்கப்படும். மேலும் தொலைத் துரத்தில் உள்ள மக்கள் என்னதான் ஏடிஎம் போன்ற சேவைகளை பயன்படுத்தினாலும் வங்களில் பணம் போடுவதற்காக வங்கிகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

தற்பொழுது இந்த சேவையானது முதற் கட்டமாக 32 வாகனங்களில் நடத்தப்பட உள்ளது. இந்த வாகனத்தில் ஏடிஎம் வசதி போன்ற  சேவைகளும்  இணைக்கப்பட்டதால் வீட்டிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்து  ஆதார் எண் சரிபார்த்த பின்னர் அவர்களுக்கு பணம் வழங்கப்படும்.

author avatar
Parthipan K