கொடுக்கப்பட்ட மின்சாரம் காணவில்லை என புகார் !!

0
64

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை பகுதியில் செட்டிபாளையம் அழகிய நகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ,கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் மின்சார இணைப்பு வழங்க கோரி செட்டிபாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விபரம் கேட்டுள்ளார்.

மின்வாரிய துறையினர் மின்சாரம் வழங்குவதற்கு ரூபாய் 10,000 வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.

மின் இணைப்புக்காக கடந்த 14-ஆம் தேதி இணைய வழி மூலமாக மின் இணைப்பு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். இதற்கான மின் இணைப்புக்கான முன்பண தொகையை ரூபாய்.2,818-யும் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் ,ஜெயலட்சுமி என்பவருக்கு கடந்த 21-ஆம் தேதி அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டதாக அலைபேசி மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. மேலும் ஜெயலட்சுமி என்பவர் அந்த மாதத்திற்கான மின் கட்டணமாக ரூபாய் பத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தும்படி அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனைக் கண்ட ஜெயலட்சுமி அதிர்ச்சியடைந்து,கொடுக்கப்படாத மின் கட்டணமான ரூபாய் 10 செலுத்தி அதற்கான ரசீதை பெற்றார்.

மேலும் இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் துறையினருக்கு புகார் ஒன்றை இணையவழி மூலம் தெரிவித்தார்.அதில் கொடுக்கப்பட்டிருந்த மின்னிணைப்பு காணவில்லை என்றும் அதில் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொடுக்கப்படாத மின்சாரத்திற்கு பணம் கேட்பதும், மின்வாரியத்தில் ஊழல் நடந்திருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K