கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல்

0
109
Corona Deaths Reduced in America-News4 Tamil Online Tamil News Today
Corona Deaths Reduced in America-News4 Tamil Online Tamil News Today

கொரோனா பாதிப்பில் ஒரு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு ஆறுதல் தரும் தகவல்

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஏறத்தாழ 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற பணியால் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையானது எல்லா பகுதிகளிலும் வெகுவாக குறைந்துஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 29 லட்சத்து 994 ஆயிரத்து 352 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரசின்  தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 969 பேர் மரணமடைந்துள்ளார். 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொரோனா வைரஸ் அங்கு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக ஆரம்பித்த சீனாவை விட அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வந்தது . இதனையடுத்து உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியவர்கள் மற்றும் அதன் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆனால், கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தினந்தோறும் 2 ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்து வந்த அந்நாட்டில் தற்போது வைரசின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ளது.குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது அந்த நாட்டில் கடந்த சில நாட்களை ஒப்பிடும் போது சற்றே குறைந்த அளவிலான பலி எண்ணிக்கையாகும். தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 160 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை

இந்நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று பரவியவர்களில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 781 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு தற்போது ஆயிரத்து 157 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 55 ஆயிரத்து 413 ஆக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தேதி வாரியான விவரம்:- 
மார்ச் 31 – 1,085  ஏப்ரல் 1 – 1,243  ஏப்ரல் 2 – 1,182  ஏப்ரல் 3 – 1,263 ஏப்ரல் 4 – 1,545 ஏப்ரல் 5 – 1,409 ஏப்ரல் 6 – 1,505 ஏப்ரல் 7 – 2,228 ஏப்ரல் 8 – 2,165 ஏப்ரல் 9 – 2,111 ஏப்ரல் 10 – 2,236 ஏப்ரல் 11 – 2,024 ஏப்ரல் 12 – 1,727  ஏப்ரல் 13 – 1,726 ஏப்ரல் 14 – 2,566 ஏப்ரல் 15 – 2,631 ஏப்ரல் 16 – 2,193 ஏப்ரல் 17 – 2,543 ஏப்ரல் 18 – 1,883  ஏப்ரல் 19 – 1,570 ஏப்ரல் 20 – 1,952 ஏப்ரல் 21 – 2,683 ஏப்ரல் 22 – 2,358 ஏப்ரல் 23 – 2,340 ஏப்ரல் 24 – 1,957 ஏப்ரல் 25 – 2,065 ஏப்ரல் 26 – 1,15