மே மாதம் 15ஆம் தேதி வரையில் இந்த சேவை முற்றிலுமாக ரத்து! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசு!

0
63

ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கி வரும் கொரோனா தொற்று காரணமாக, மொத்த உலகமும் கடந்த ஒரு வருட காலமாகவே ஊரடங்கிலேயே இருந்து வந்தது. அதாவது ஊரடங்கு என்பது முதன்முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி இந்தியாவில் தான் போடப்பட்டது. அதனை பின்தொடர்ந்து தான் மற்ற நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தனர்.அன்று தொடங்கிய ஊரடங்கு சுமார் ஒரு வருட காலத்தை கடந்தும் இன்று வரையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆங்காங்கு போடப்பட்டு தான் இருக்கிறது.

சீன நாட்டின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்சமயம் சுமார் 200 உலக நாடுகளுக்கு பரவி இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரையில் இந்த வைரஸ் தொற்றினால் 148,480,035 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் இந்த வைரஸ் காரணமாக 3,133,637 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரையில்126,099,853 நபர்கள் குணம் அடைந்து இருக்கிறார்கள். சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்சமயம் அமெரிக்கா மற்றும் பிரேசில், இந்தியா போன்ற முக்கிய நாடுகளில் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது.

அதேபோல இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2771 என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் இந்த நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் பரவல் காரணமாக மே மாதம் 15ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது.