லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா 2019 #WorldCup2019

0
83
Cricket world cup 2019 opening ceremony to begin at London today-News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live Updates Today
Cricket world cup 2019 opening ceremony to begin at London today-News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live Updates Today

லண்டனில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க விழா 2019 #WorldCup2019

உலகம் முழுவதுமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மே 30-ம் தேதியான இன்று லண்டன் நகரில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடத்தபடுகிறது. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் எனத் தேர்வாகிய 10 நாடுகளுடைய கிரிக்கெட் அணிகளும் இந்த உலகக் கோப்பைக்குத் தயாராக உள்ளன. #WorldCup2019

இதுவரையும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள 11 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியானது 5 முறை வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இன்டீஸ், இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் தலா 2 முறையும்,  பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றுள்ளன. வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்தில் உள்ள வெவ்வேறு மைதானங்களில் நடக்கவிருக்கிறது. 

மொத்தம் 46 நாட்கள் நடைபெறவுள்ள இந்த உலககோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளன. இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் போன்ற நாடுகள் இந்த உலககோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றுள்ளன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதிச் சுற்றின் மூலமாக உலகக் கோப்பை போட்டிக்கு நுழைந்துள்ளன.

Cricket world cup 2019 opening ceremony to begin at London today News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live Updates Today2

முதலில் இங்கிலாந்து – தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் முதல் லீக் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் மே 30-ம் தேதியான நாளை தொடங்குகிறது.  உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு, லண்டனில் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற உள்ளது. இன்று நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியை ஏறக்குறைய 4,000 ரசிகர்கள் நேரடியாகக் காணும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த விழாவானது இந்திய நேரப்படி, இரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஆனால், குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் 10 அணிகளின் வீரர்களுக்கு மட்டும் தொடக்க விழாவில் கலந்துகொள்ள  ஐசிசி அனுமதி மறுத்துள்ளது. இதற்கு காரணமாக நடைபெறவுள்ள உலககோப்பை தொடக்க விழாவில் பங்கேற்பதனால், போட்டியில் விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால், அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.  இந்த தொடக்க விழா நிகழ்ச்சிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரிடையாக ஒளிபரப்பவுள்ளது.

Cricket world cup 2019 opening ceremony to begin at London today

icc cricket world cup 2019 live streaming

cricket world cup 2019 tv rights india

icc cricket world cup 2019 broadcast channel in india

icc world cup 2019 broadcast channel

2019 cricket world cup broadcast rights in india

cricket world cup 2019 broadcast rights

icc world cup 2019 broadcast rights india

world cup 2019 channel india

author avatar
Parthipan K