கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

155 கிலோ கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் 155 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய த்கவலின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், பை ஒன்றில் 155 … Read more

தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

தனியார் பள்ளியில் 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த திமுக கவுன்சிலர்!!!

விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக கவுன்சிலர் – தானாக முன்வந்து வழக்கு விசாரணை துவங்கியுள்ள தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது விருத்தாசலத்தில் மழலையர் தொடக்க பள்ளி வரும் திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி தன்னுடைய பள்ளியில் UKG படிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் “வேலியே பயிரை … Read more

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!!

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!!

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!! ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது ரோந்து போலீசார் வந்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம். பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலு செட்டி சத்திரம் பகுதி பஜார் வீதியில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்த போலி மருத்துவர்கள்! சோதனையில் இறங்கிய சுகாதார ஊழியர்கள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்த போலி மருத்துவர்கள்! சோதனையில் இறங்கிய சுகாதார ஊழியர்கள்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மருத்துவ பணிகள் இணை இயக்குனர் செ.கற்பகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் குடிமை மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகநயினார், சுகாதார அலுவலர்கள் காமாட்சி, அருணாசலம், பெவின், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், புதுக்கோட்டை போலீஸ் … Read more

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! பாதிப்படைந்த தாயார் மருத்துவ அறிக்கை கேட்டு மனு!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்! பாதிப்படைந்த தாயார் மருத்துவ அறிக்கை கேட்டு மனு!!

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது சகோதரர் தொடர்பான மருத்துவ அறிக்கை கேட்டு ஆர்டிஐ மூலம் அவர்களது தாய் ராஜேஸ்வரி மனு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிப்படி தகவல்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 7ன் கீழ் 1 படி ஒரு நபரின் வாழ்க்கை அல்லது சுதந்திரம் தொடர்பான தகவல்களில், கோரிக்கை பெறப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பதில் வழங்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் … Read more

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல். பெங்களூரு சிட்டி மார்க்கெட் ஏரியா அருகே ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு கோடி பணத்தை பெங்களுரு போலீசார் கண்டுபிடித்தனர். போலீசாரின் அளித்துள்ள தகவலின்படி, சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாயுடன் பயணித்த போது அவர்களின் ஆட்டோ பழுதடைந்தது. ஒரு போக்குவரத்து காவலர் … Read more

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா பறிமுதல்!! இளைஞர் இருவர் கைது!!!

கொச்சியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரிலிருந்து 177 கிலோ கஞ்சா கண்டுபிடித்த வழக்கில் இருவர் கைது. மற்றொரு கூட்டாளி 16 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தால் காரை வீட்டு சென்றனர். கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள வாடகை கார் நிறுவனத்தில் கடந்த மாதம் 30 தேதி கடவந்திரா பகுதியை சேர்ந்த இருவர் ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். பின் வாடகை கார் நிறுவனத்திற்கு காரை கொடுக்காததாலும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் இல்லாததால் காரை தேடியுள்ளனர். அப்பொழுது … Read more

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்! 

கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் இறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த 8 வயது இளம் பக்தனுக்கு நேர்ந்த சோகம்!  கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த 27 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலை புனித யாத்திரை சென்றது. அந்த குழுவில் கிருஷ்ணகிரி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனான முனீஸ்வரன் மற்றும் அவனது தாத்தா, பாட்டி, மாமா உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சபரிமலை செல்லும் வழியில் அதிர பள்ளிக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் குழு ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினர். … Read more

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்! 

ஓய்வு பெற்ற இந்திய அதிகாரிகள் கைது விவகாரம்! செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்த வெளியுறவுத்துறை  செய்தி தொடர்பாளர்!  கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ள எட்டு இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளுக்கு தூதரக உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது, இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வாராந்திர செய்தியாளர் சந்திப்பை மேற்கொண்டார். கத்தார் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கைது செய்து … Read more

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை சென்னையில் அரை கிலோ ஹெராயின் விற்க முயன்ற ராஜஸ்தானை சேர்ந்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ராஜஸ்தானை சேர்ந்த ராஜூ ராம் விஷ்னோய் என்பவர் 500 கிராம் ஹெராயினை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கையும் களவுமாக கைது … Read more