பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்!

0
192
#image_title

பெங்களூருவில் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.

பெங்களூரு சிட்டி மார்க்கெட் ஏரியா அருகே ஒரு ஆட்டோவில் இருந்து ஒரு கோடி பணத்தை பெங்களுரு போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசாரின் அளித்துள்ள தகவலின்படி, சுரேஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவர் ஆட்டோவில் ஒரு கோடி ரூபாயுடன் பயணித்த போது அவர்களின் ஆட்டோ பழுதடைந்தது.

ஒரு போக்குவரத்து காவலர் அவர்களிடம் வந்து ஏன் நிறுத்தினார்கள் என்று கேட்டார், அப்போது அவர் சுரேஷ் மற்றும் பிரவீன் சந்தேகத்திற்குரிய நடத்தையை கவனித்தார்.

அவர் உடனடியாக எஸ்ஜேபி பார்க் காவல் நிலையத்தின் சட்டம்-ஒழுங்கு போலீஸ் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனை செய்த போது, ​​இரண்டு பைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பணம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அவர்கள் விஜயநகரில் இருந்து ஜெயநகர் நோக்கிச் சென்றதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

பணத்தின் ஆவணங்களைக் காட்டுமாறு போலீஸார் அவர்களிடம் கேட்டபோது, ​​எந்த ஆவணத்தையும் அவர்களால் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

author avatar
Savitha