செரிமான பிரச்சனை குணமாக! 5 உலர் திராட்சை!

0
182
#image_title

செரிமான பிரச்சனை குணமாக! 5 உலர் திராட்சை!

உலர் திராட்சையில் உள்ள நற்குணங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.உலர் திராட்சையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய பொருளாகும்.இதில் நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சத்துக்களும் அதிக படியாக நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறது என்பதனை விரிவாக காணலாம்.

ஐந்து உலர் திராட்சை மற்றும் ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த திராட்சை மற்றும் அதனுடன் நீரையும் பருக வேண்டும்.

இவ்வாறு சாப்பிட்டு வருவதன் காரணமாக நம் உடலுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கிறது. உலர் திராட்சையும் நீரை பருகுவதன் காரணமாக செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணம் அடைய உதவுகிறது. நம் உடலில் உள்ள அனைத்து கெட்ட கழிவுகளையும் அளித்து உடலினை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பயன்படுகிறது. வாரத்திற்கு இருமுறையாவது ஊறவைத்த உலர் திராட்சையும் நீரை பருகி வருவதன் காரணமாக ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு கெட்ட கொழுப்புக்கள் வெளியேறுவதன் காரணமாக இதயம் சார்ந்த பாதிப்புகள் வராதவாறு பாதுகாக்கிறது. கல்லீரலையும் பாதுகாக்கிறது. உலர் திராட்சையில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவ்வித மருத்துவ குணங்கள் நிறைந்த உலர் திராட்சை நாம் வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

author avatar
Parthipan K