மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள! வாரம் இரண்டு முறை இந்த மீன் சாப்பிட வேண்டும்!

0
198
#image_title

மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள! வாரம் இரண்டு முறை இந்த மீன் சாப்பிட வேண்டும்!

மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.அன்றாடம் வாழ்வில் மாறிவரும் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகளின் காரணமாக நம் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது.அதில் ஒன்று மாரடைப்பு.இவை ஏற்படுவதற்கு காரணம் ரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் வடிவதன் காரணமாக ரத்த அடைப்பு ஏற்பட்டு இதயத்திற்கு ரத்த ஓட்டம் செல்லாத பொழுது மாரடைப்பு ஏற்படுகிறது.

தற்போது உள்ள காலகட்டத்தில் மாரடைப்பு அனைத்து இளம் வயதில் உள்ளவர்களை பாதிக்கிறது. இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் மற்றும் எவ்வித உணவினை எடுத்துக் கொள்ளலாம் இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

பச்சை காய்கறி வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் கீரைகள், காலிபிளவர் குடைமிளகாய் போன்ற காய்கறிகளை வைட்டமின் ஏ சி போல விட்டமின் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகப்படியாக நிறைந்துள்ளது. 100 கிராம் பச்சை காய்கறிகளில் 5 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கும் எனவே மாரடைப்பினால் அவதிப்பட கூடியவர்கள் தினசரி உணவுகளுடன் பச்சை காய்கறிகளை சேர்த்து கொள்வது நல்லதாகும்.

பழவகைகளான ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி பழங்களில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ரத்த குழாய்களில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இருதயம் சார்ந்த பாதிப்புகள் வராதவாறு பாதுகாக்கிறது.

மாரடைப்பு மிக உகந்த உணவு நம் அந்த வகையில் சால்மன் மீனில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை ரத்த குழாய்களில் படியக்கூடிய ட்ரை கிளஸ்டர் எனும் கெட்ட கொழுப்பையும் கரைத்து எச்டிஎல் எனும் நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் வகைகளை சாப்பிட வேண்டும்.

author avatar
Parthipan K