மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

0
79
Curfew Restrictions Restarted! The fourth wave is over!
Curfew Restrictions Restarted! The fourth wave is over!

மீண்டும் போடப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! நான்காவது அலை உட்சம்!

கொரோனா தொற்றின் முதல் அலை தொடங்கிய சமீபத்திலேயே பல உயிர்களை இழக்க நேரிட்டது. பத்தரே பற்றி சரிவர அறியாததால் எந்தவித முன்னெச்சரிக்கையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் பல மக்கள் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பின்பு இவற்றினை பற்றி அறிந்து பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க காரணத்தினால் தொற்று பரவாமல் தடுப்பது மிகவும் சிரமத்திற்குள்ளானது. பின்பு தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததும் அதனை அனைத்து நாட்டு மக்களும் செலுத்தி வந்தனர். தற்பொழுது இந்தியாவில் சிறார்களுக்கும் தடுப்பூசி நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தான் கொரோனாவின் முதல் ,இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை முடிவுக்கு வந்தது. இதன் பரிமாற்ற வளர்ச்சியாக நான்காவது அறை வரை இருப்பதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதிக்கு மேல் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி வரை இந்த நான்காவது அறை தீவிரம் காட்டும் என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டும் மேலும் பூஸ்டர் போன்ற தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் மூலம் நான்காவது அலை தீவிரம் காட்டுவதை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மூன்று அலைகள் ஏற்படுத்திய பாதிப்பின் ஆளையே இன்றுவரை பாமர மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை பழைய நிலைக்கு வாழ முடியவில்லை. அது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பெரும் சரிவை சந்தித்து விட்டது. இவ்வாறு இருக்கையில் தற்போதுதான் மக்கள் மீள முயற்சித்து வருகின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் மீண்டும் நான்காவது அலை என ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க கூடினால் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம். மீண்டும் வாழ்வாதாரம் நடத்துவது பெரும் சிரமமாக இருக்கும். இந்த நான்காவது அணையில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இரண்டு தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டும்.