அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

0
82

மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வகித்த அந்த துறையினை கே.பி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருக்கின்றார்.

தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.

இந்தநிலையில், துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் வகித்த வேளாண்மைத்துறையை அதே சமூகத்தைச் சார்ந்த தனக்கு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகமும் டெல்டா பகுதியை சார்ந்த தன்னுடைய ஆதரவாளர் க்கு தரவேண்டும் என்று வைத்திலிங்கம் முதல்வரை வலியுறுத்தியதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் துரைக்கண்ணு அவர்கள் வசம் இருந்த வேளாண்மைதுறையினை உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் அவர்களுக்கு, பரிந்துரை செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், திரு கே.பி அன்பழகனுக்கு உயர்க்கல்வித்துறையுடன் வேளாண்மை துறை கூடுதல் பொறுப்பாக அளிப்பதாகவும், இனி அவர் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது, அவரிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அவருடைய சமூகத்தை சார்ந்த ஆர்பி உதயகுமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதுபோல் சிவி சண்முகம் வேளாண்மைத் துறையை கேட்ட நிலையில் அதே வன்னியர் சமூகத்தை சார்ந்த கேபி அன்பழகன் இடம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக கடும் அதிருப்தியில் சி.வி.சண்முகம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.