சபாநாயகரின் செயலால் கலகலப்பான சட்டசபை!

0
65

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கின்றார்.

சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்துகொண்டே வருகிறது. சென்ற எட்டு மாதங்களில் 150 ரூபாய்க்கு மேல் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில், நேற்று முந்தினம் மேலும் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு தற்சமயம் சிலிண்டர் ஒன்றின் விலை 175 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது இதில் நேற்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியிருக்கிறார். சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த விலை உயர்வை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதில் தெரிவித்த நிதியமைச்சர் தியாகராஜன் எரிவாயு சிலிண்டரின் மூலமாக தமிழக அரசுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை. விலையைத் தீர்மானிப்பது மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும், தான். சிலிண்டர் விலையை குறைப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும் ஆனால் விலையை குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசிடம் கிடையாது என்று தெரிவித்தார்.

அந்த சமயத்தில் குறிப்பிட்டு உரையாற்றிய சபாநாயகர் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி சிலிண்டர் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று தெரிவித்ததால் சட்ட சபையில் சிரிப்பலை உண்டானது.