கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

0
69
#image_title

கோலிவுட்டில் வில்லனாக மிரட்டிய டாப் 4 ஹீரோக்களின் விவரம்!!

திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் வேடங்களில் ஏற்று நடிப்பது மிகவும் கடினம்.ஒருவர் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துவிட்டு பின்னர் ஹீரோவாக நடிப்பது என்பது மிகவும் கடினம்.காரணம் மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்த சூத்திரத்தை உடைத்து வில்லனாக நடித்து மக்களை மிரட்டிய நடிகர்கள் பின்னாளில் மிகப்பெரிய ஹீரோக்களாக உருவெடுத்து டாப் 4 வில்லன் டூ ஹீரோ நடிகர்களின் தொகுப்பு இதோ.

1.ரஜினிகாந்த்

கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக கொண்டாடப்படும் ரஜினி அவர்கள் முதலில் ஏற்று நடித்தது வில்லத்தமான வேடம்.80களில் தமிழ் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் பேர் போன ரஜினி அவர்கள் 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள்,அதனை தொடர்ந்து வெளியான மூன்று முடுச்சி,அவர்கள்,16 வயதினிலே,ஆடு புலி ஆட்டம், காயத்திரி, நெற்றிக்கண்ணன்,பில்லா உள்ளிட்ட படங்களில் கதைக்கேற்ப வில்லனாகவே வாழ்ந்திருப்பார்.

இவர் வில்லனாக ஏற்று நடித்த பல படங்களில் கமல்ஹாசன் தான் ஹீரோவாக தோன்றிருப்பார்.மூன்று முடுச்சி படத்தில் “வசந்த கால” என்று ஆரமிக்கும் பாடலில் வரும் படகு காட்சியில் தன் உச்சகட்ட வில்லத்தமான நடிப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.ரஜினி தனது சிறப்பான நடிப்பால் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தார்.தமிழ் படங்களில் வில்லன்களாக அறிமுகமாகி ஹீரோக்களாக உருவெடுத்த நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து புகழ்பெற்று பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடும் அளவிற்கு மாஸ் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் ரஜினி.

2.விஜயகாந்த்

தமிழ் திரையுலகில் கேப்டனாக வலம் வந்தவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த்.திரையுலகில் ஆரம்ப காலத்தில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள மிகவும் கஷ்டப்பட்ட நடிகர்களில் ஒருவர்.பல போராட்டங்களுக்கு பின்னர் ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் சிறு வேதத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1979 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அருண் என்ற கதாபத்திரத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய பெயரை பெற்றார்.அதனை தொடர்ந்து நூல் அருந்த பட்டம்,ஓம் சக்தி,பார்வையின் மறுபக்கம்,ராமன் ஸ்ரீ ராமன் உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.ஹீரோவாக நடிக்க வேண்டுமென்று ஆசை கொண்டிருந்த அவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அவரின் மார்க்கெட்டை சரிக்கவே அவரை சிலர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் போட்டனர்.இதனால் விஜயகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் ஒருவர் நீ தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்.இனி ஹீரோ கதாபத்திரத்தில் நடிக்க தொடங்கு என்று அறிவுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று பின்னாளில் கட்சி தொடங்கும் அளவிற்கு வளர்ந்தார் விஜயகாந்த்.

3.சத்யராஜ்

தமிழ் திரையுலகில் 80 காலகட்டங்களில் மிரட்டும் வில்லனாக புகழ் பெற்றவர் சத்யராஜ்.இவர் மூன்று முகம்,பாயும் புலி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.வில்லனாக இருந்து ஹீரோவான ரஜினி படங்களில் சத்யராஜ் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு கட்டத்தில் வில்லன் கதாபத்திரத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகி நல்ல பெயர் சொல்லும் கதாபத்திரங்களில் நடித்து பின்னாளில் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தார்.இதனை தொடர்ந்து தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

4.சரத்குமார்

தமிழ் திரையுலகில் இன்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் திரைப்பயணத்தை தொடங்கிய காலத்தில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.

புலன் விசாரணை,சந்தன காற்று,உறுதிமொழி,ராஜா கைய வச்சான்,ஜெகதலப்பிரதாபன் உள்ளிட்ட படங்களில் தனது கோர வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களை ஈர்த்தார்.ஆரம்ப காலத்தில் பல படங்களில் முன்னணி ஹரோக்களுக்கு வில்லனாக தோன்றிய சரத்குமார் பின்னாளில் முக்கிய கதாநாயகனாக உருவெடுத்தார்.