பணமில்லை மன்னா! புலம்பும் தேமுதிக நிர்வாகிகள்!

0
77

தமிழகத்தில் எதிர் வரும் சட்டசபைத் தேர்தலை தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து சந்திக்க இருக்கிறது. தேமுதிகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த 60 தொகுதிகளில் விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். ஆகவே அந்தத் தொகுதியில் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் யாவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இரு கட்சிகளின் பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தேமுதிகவின் பிரச்சாரம் இல்லை என்று சொல்லப்படுகிறது.அதோடு அந்த கட்சியின் அனேக வேட்ப்பாளர்கள் பிரச்சாரம் செய்ய பணமில்லை என தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக அந்த கட்சியின் வேட்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி தோல்வி என்பதைவிட நம்முடைய கட்சியின் வளர்ச்சியும் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது தான் நம்முடைய முக்கிய நோக்கம் என்று அந்த கட்சியின் தலைமை தெரிவித்திருப்பதாக செல்கிறார்.

ஆகவே எங்கள் கட்சியின் தலைமை அறிவுறுத்தல்படி தேர்தலை சந்திக்கப்பதற்கு பிரச்சாரம் செய்து வருகிறோம் எங்கள் கட்சியின் அனேக வேட்ப்பாளர்கள் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் தான். ஆகவே அவர்களை போல எங்களால் செலவு செய்ய இயலாது எங்கள் கட்சியின் சார்பாகவோ அல்லது கூட்டணியின் சார்பாகவோ இதுவரையில் 100 ரூபாய் கூட எங்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

ஆகவே வேட்பாளர்களிடம் இருக்கும் பணத்தை வைத்துத்தான் இதுவரையில் நாங்கள் பிரச்சாரத்தை செய்து வருகிறோம். இன்னும் ஒரு சில நாட்கள் பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனால் அதற்கு பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தேர்தலுக்கான வாகனச் செலவு, தொண்டர்களுக்கு உணவு போன்ற பிரச்சார செலவுக்கு கட்சி நிதி ஒதுக்கினால் கூட கட்சி நிர்வாகிகள் மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.