சட்டசபை தேர்தல் அதிரடி முடிவை எடுத்த தமிழக மக்கள்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
168

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒருசில தினங்களில் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சியை ஆளுங்கட்சியை விமர்சனம் செய்வதும் இப்படி மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர் தற்போது உச்சத்திற்கு வந்திருக்கிறது காரணம் நாளை மாலை ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

ஆனால் அரசியல் கட்சி தலைவர்கள் செல்லுமிடமெல்லாம் கூடும் கூட்டத்திற்கு பஞ்சமில்லை என்னதான் கொரோனா பரவல் காரணமாக, மக்கள் ஒன்று கூட கூடாது என்று அரசு அறிவித்திருந்தாலும் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏராள மக்கள் ஒன்று கூடி நிற்கிறார்கள்.


அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் எங்கு சென்றாலும் லட்சோப லட்சம் மக்கள் ஒன்றுகூடி அவர்களை காண்பதற்காகவே வந்துவிடுகிறார்கள். ஆனால் அதனை தொலைக்காட்சியில் காண்பவர்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பதில் மிகப் பெரிய சந்தேகம் எழுந்து விடுகிறது..அந்த அளவிற்கு ஒன்றுக்கொன்று கூடும் கூட்டத்திற்கு பஞ்சம் இருப்பதில்லை.

ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டம் கூடுவதையும் தவிர்த்து அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் மனதில் பெரிய அளவில் பதிந்து இருக்கிறது. அந்த அளவிற்கு மக்களை கவரும் விதமாகவும் அதே வேளையில் வளர்ச்சித் திட்டங்களை மனதில் வைத்தும் அந்த தேர்தல்அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராக திரு தர்மராஜ் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

ஆகவே அவரை ஆதரிக்கும் விதமாக அந்த கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மத்திய மாநில அரசுகளிடம் இருந்து திட்டங்களை வாங்கி கொடுக்கும் விதத்தில் நட்பு பலமாக இருக்கிறது என்று.தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு அதன்படி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதன் காரணமாக, அதிமுக ஆட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமையவிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ஜிகே வாசன்.பெண்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

அதேபோல மக்களுடைய குறைகளையும் கஷ்டங்களையும் குறைப்பதற்காகவே அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு திமுகவிடம் இல்லாத நல்ல குணம் அதிமுகவிடம் இருக்கிறது. அதிமுகவிற்கு வாக்களித்தால் அது தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்று தெரிவித்திருக்கிறார் ஜி கே வாசன்.