இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

0
102
#image_title

இருமல் நொடியில் குணமாக இதை மட்டும் செய்யுங்கள்!!

இருமல் என்பது தொண்டை அல்லது மூச்சுக்குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தும் உடலின் எதிர்வினை.

இருமல் என்பது மூச்சுக்குழாயின் நுழைவாயிலை மூடியிருக்கும் சிறிய ட்ராப்டோரான எபிக்லோட்டிஸ் வழியாக நுரையீரலில் இருந்து திடீரென காற்றை வெளியேற்றுவதாகும்.

இதில் வறட்டு இருமல், ஈரமான இருமல், கக்குவான் இருமல், எரியும் இருமல், கடுமையான இருமல் என்று பல வகைகள் உள்ளது.

இந்த இருமலை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி இங்கு பார்ப்போம்.

செய்முறை 1:
சிறிதளவு மஞ்சள் எடுத்து பற்களுக்கு அடியில் அதை வைத்து உமிழ்நீருடன் கலந்து அது கரைந்து உடம்பிற்குள் செல்லுமாறு மூன்றிலிருந்து நான்கு நாட்கள் சாப்பிட வேண்டும் இது பெரியவர்களுக்கு மட்டும்தான்.

செய்முறை 2:
சிறுவர்களுக்கு இதே மஞ்சளில் சிறிதளவு தேனை கலந்து கொடுத்து வந்தால் வரட்டு இருமல்கள் விரைவில் குணமாகும். வெறும் மஞ்சளை சாப்பிட மாட்டேன் என்று சொல்லும் பெரியவர்களும் சிறிதளவு தேனை கலந்து உண்டு வரலாம்.

செய்முறை 3:
சிறுதுண்டு இஞ்சியை நன்றாக துருவிக் கொண்டு அதிலிருந்து சாறை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் தேனை கலந்து கொள்ள வேண்டும்.

ஆனால் சர்க்கரை நோயாளிகள் தேயை தேனை எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதை இருமல் உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை என்று அரை தேக்கரண்டி அளவு கொடுத்து வரவும்.

பெரியவர்களுக்கு இந்த இஞ்சி தேன் கலந்த சாரில் சிறிதளவு மிளகைப் பொடியாக்கி சேர்த்து வர விரைவில் இருமல் குணமாகும்.

சிறியவர்கள் மிளகுப்பொடி இல்லாமலும் பெரியவர்கள் மிளகு பொடியை கலந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த சமயத்தில் குளிர்ச்சியான பொருட்களை நாம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு நாம் செய்து வருவதால் உடம்பில் எந்த நோயும் நம்மை பாதிக்காமல் விரைவில் குணமாகலாம்.

 

author avatar
CineDesk