மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..

0
232

மூளைக் காய்ச்சல் பற்றி உங்களுக்கு தெரியுமா?அதன் வகைகளும் தடுக்கும் வழிமுறைகளும்!..

 

மூளைக் காய்ச்சல் என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச்சவ்வுகளின் சுற்றி வீக்கம் ஏற்படுவதே இந்நோய்க்கு முக்கிய காரணமாகும். பாக்டீரியா வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய் காரணிகளினால் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது.கியூலெக்ஸ் எனும் வகையை சேர்ந்த கொசு கடிக்கும் போது மனிதனின் உடலுக்குள் வைரஸ் சென்று மூளைக்காய்ச்சலை ஏற்படுத்துகிறது. வைரஸ் கிருமிகளால் மூளையும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து போய்விடுகின்றன. இதுதான் மூளைக்காய்ச்சல் எனப்படுகிறது.மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது.அதன்படி முக்கியமாக மூளையை பாதிக்கும் வைரஸ்கள்

தாவாட்டி அம்மை,மணல்வாரி அம்மை, ரூபெல்லா,சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ்,பாக்ஸ் வைரஸ்,ரேபிஸ் வைரஸ்,ஈக்குன் வைரஸ்,டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள் ஆகும்.மேலும் மூளைக்காய்ச்சலின் வகைகள் சிலவற்றை பார்ப்போம்,

அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.மூளையின் பாதுகாப்பான ஜவ்வைத் தாக்குவது.மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும் மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது தான் இதன் வேலை.குழந்தை திடீரென்று நினைவிழந்தாலோ வலிப்பு வந்தாலோ உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்பாட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் தடுப்பூசியைச் சரியாகப் போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.முதலில் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். குப்பையைச் சேர்க்கக்கூடாது. தண்ணீர் தேங்காமலும் கொசு வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

author avatar
Parthipan K