சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?

0
163

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில்  உருவாக்கப்பட்டதுதான் நேருவின் பஞ்சசீல கொள்கை.

இந்தக் கொள்கையானது இந்திய பிரதமர் நேரு, சீன பிரதமரின் சூ-யென்-லாய் இருவரிடையே 1954 ஏப்ரல் 28ம் தேதி பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பஞ்சசீல கொள்கையை ஏற்றுக் கொண்டு இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

இந்தக் கொள்கையானது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதித்து நடப்பது, மற்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பது,

மூன்றாவது ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது. நான்காவதாக சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை மற்றும் சகவாழ்வு பங்கம் செய்யாதிருப்பது என உறுதியளிக்கப்பட்டது.

ஐந்தாவதாக பொது அமைதியை நிலைநாட்டுவது. இப்படி  5 அம்ச   பஞ்சசீல கொள்கையை  மூலம் சுதந்திரமடைந்த நாடுகளுக்கிடையே சர்வதேச உறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை ரீதியான அணுகுமுறை உறுதி செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தம் உருவான பின்னர்  அண்டை நாடான இலங்கையின் தலை நகரமான கொழும்புவில் ஆசிய பிரதமர்கள் மாநாட்டின் போது நேருவின் பஞ்சசீல கொள்கைகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. 

அதன்பின் பிரதமர் நேரு ‘அக்சய்சின்’ பகுதி இந்தியாவின் பகுதியே என்பதில் உறுதியாக இருந்தார். சீன தரப்பில் எந்த பதிலும் உடனடியாக தெரிவிக்கவில்லை.

இருப்பினும் சீன பிரதமர் சூ-யென்-லாய் இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு உரிமை கோரப் போவதில்லை, ஆனால் ‘அக்சய்சின் சீனாவின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்றார்.

அப்போதிலிருந்தே சீன இந்திய எல்லைப் பிரச்சினை தீர்ப்பதற்கு பல முடிவுகள் கொண்டு வந்தாலும் அதனை கொஞ்சம் கூட மதிக்காமல் சீனா தன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. 

author avatar
Parthipan K