கொஞ்சம் வித்தியாசமான சுவையான சிக்கன் ரோல் – ஈஸியா செய்வது எப்படின்னு தெரியுமா?

0
38

கொஞ்சம் வித்தியாசமான சுவையான சிக்கன் ரோல் – ஈஸியா செய்வது எப்படின்னு தெரியுமா?

அசைவ பிரியர்கள் அனைவரும் சிக்கனை ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் ப்ரை, சிக்கன் 65 என்று பல வகைகளில் சாப்பிட்டுக்கிறார்கள்.

ஆனால், மாலை நேரத்தில் அருமையான ஸ்நாக்ஸாக சிக்கன் ரோல் எப்படி ஈஸியா செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

சிக்கன் – ½  கிலோ
இஞ்சி பூண்டு விழுது –  2  ஸ்பூன்
ஜீரகத் தூள் –  2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
சாட் மசாலா – ½  ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிதளவு
கொத்தமல்லி சட்னி – ½ கப்
மைதா – 300 கிராம்

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து அதில் உள்ள எலும்புகளை நீக்கிவிட வேண்டும்.
பின்னர் சுத்தம் செய்த சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் சிக்கனில் சிறிதளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.
பிசைந்த சிக்கனை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ள வேண்டும்.
பிசைந்த மைதா மாவை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர், மைதா மாவை சப்பாத்தி போல் தேய்த்து சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு வதக்க வேண்டும்.
சிக்கன் கொஞ்சம் வதங்கியதும், அதில், சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
சிக்கன் வதங்கி நன்றாக வெந்தபிறகு, அதில் மிளகு தூள் கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டும்.
இதன் பின்னர், சுட்டு எடுத்து வைத்த மைதா ரொட்டியில் சிறிது தக்காளி சாஸ் தடவ வேண்டும்.
பிறகு, வதக்கி வைத்த சிக்கனை வைத்து மைதா ரொட்டியை ரோலாக சுருட்ட வேண்டும்.
சுவையான சிக்கன் ரோல் ரெடியாகிவிட்டது.

இந்த சிக்கன் ரோலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

author avatar
Gayathri