‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..!

0
33
#image_title

‘முதல்வன்’ பட பாட்டில் ஏன் அந்த 3 பாம்புகள் வந்ததன்னு தெரியுமா? ஷங்கர் மூளையே மூளைத்தான்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஷங்கர். நடிகர் அர்ஜூனை வைத்து இவர் ‘முதல்வன்’ படத்தை இயக்கினார். இப்படம் சொன்ன அரசியல் காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு நாள் முதல்வனாக அர்ஜுன் செய்யும் செயல்கள் அப்படத்தில் தனித்துவத்தை பெற்றது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு நாள் முதல்வன் கிடைத்தால் நமக்கு எப்படி இருக்கும் என்று கூட பேசியுள்ளனராம். அந்த அளவிற்கு அர்ஜூன் அந்த காட்சிகளை மாஸா செய்து முடித்தார்.

இப்படத்தில்  ‘முதல்வனே என்னை நீ’ என்ற பாடல் இடம் பெற்றது. ஆனால், இப்பாடல் ஸ்பெஷல் என்னவென்றால் பாட்டு இடையில் 3 பாம்புகள் வரும். பார்ப்பதற்கு மிக நீளமாக இருக்கும். மணிவண்ணன், வடிவேலு, ரகுவரன் உருவத்தில் கிராஃபிக்ஸ் மூலமாக அந்தப் பாம்புகளை இயக்குநர் ஷங்கர் சித்தரித்திருப்பார். ஆனால், அப்பாடலில் மொத்தம் 3 பாம்புகள் இல்லையாம்.. 5 பாம்புகளாம்.

ஏன் அப்பாடலுக்கு ஷங்கர் 3 பாம்புகளை வைத்தார் என்ற பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தில் ஹீரோவுக்கு, ஹீரோயின் கால் பண்ணாலும், வடிவேலும், மணிவண்ணனும் அவர் பிஸியாக இருக்கிறார் என்று சொல்லி போனை கட் செய்துவிடுவார்கள். இதனால் கடுப்பான ஹீரோயின் தன் கனவு உலகத்தில் ஹீரோவோட டூயட் பாட ஆசைப்படுவார்கள். அப்படி டூயட் பாடும்போது, முதல்வரான ஹீரோ கனவு உலகத்திலேயே ஃபைல்ஸை போட்டு புரட்டிக் கொண்டிருப்பார்.

அப்போது, ஹீரோவை ஹீரோயின் இழுத்துப்போக வடிவேலு, மணிவண்ணன் பாம்பாக வந்து ஹீரோவை ஹீரோயினுடன் நெருங்க விடாமல் தொல்லை கொடுப்பார்கள். அரசியலில் அர்ஜூனுக்கு எதிரியாக இருக்கும் ரகுவரனையும் பாம்பாக சித்தரித்திருப்பார் ஷங்கர்.

ஐந்தாவது பாம்பு ஹீரோயின் அப்பா விஜயகுமார். இவர் கழுத்தில் govt job என்று எழுதப்பட்டிருக்கும். தன் மகளை அரசு வேலை செய்யும் பையனுக்குதான் கட்டிவைப்பேன் என்று கூறுவார். அதைத்தான் பாம்பு பாட்டில் காட்டியிருப்பார் ஷங்கர்.

இப்பாடலில் எல்லா பாம்புகளையும் அர்ஜூன் ஒழித்துக் கட்டிவிடுவார். ஆனால், அப்பா பாம்பை மட்டும் ஒன்றும் செய்யமாட்டார். ஏனென்றால் அவர் ஹீரோயின் அப்பா. என்ன செய்வது தெரியாமல் அர்ஜூன் முழிக்க, அப்பா பாம்பு அர்ஜூனை விழுங்கி விடும். இப்படி ஒரே பாட்டில்  ஒட்டுமொத்த படக்கதையை ஷங்கர் அழகாக காட்டியிருப்பார்.

author avatar
Gayathri