ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா!

0
98
Does India support Russia? Condemning America!
Does India support Russia? Condemning America!

ரஷ்யாவை இந்தியா ஆதரிக்கிறதா? கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா!

உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 14 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் தொடங்கி சில நாட்களிலேயே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்களின் நலன் கருதி தற்காலிகமாக கோரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த பகுதிகளை தவிர்த்து தற்போது வரை மற்ற பகுதிகளில் போர் நடைபெற்று தான் வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அணு உலை மீது ரஷ்யா தாக்கியது அனைத்து நாடுகளுக்கிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய மீது பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். உலக நாடுகள் ரஷ்ய மீது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அவர்களின் சேவையை ரஷ்யாவில் தடை விதித்துள்ளனர். மேலும் ரஷ்யாவும் போரை நிறுத்த வேண்டும் என்றால் உக்கரைன் தாங்கள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று தெரிவித்து வருகிறது. ஆனால் உக்ரைனோ ரஷ்யாவின் எந்த நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவது போல் தெரியவில்லை. உலக நாடுகள் ரஷ்யாவின் ஏற்றுமதி இறக்குமதி வணிக சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் ரஷ்யா கச்சா எண்ணையை விற்க முடியாமல் தவித்து வருகிறது. இந்தியாவிலேயே கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு என்று உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் ரஷ்யா இந்திய மதிப்பீட்டின் கீழ் கச்சா எண்ணெய் வழங்குவதாக கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் இந்தியா தயாராக உள்ளது. இந்த சூழலில் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குவது குறித்து அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது உக்கரைனையும் எதிர்ப்பதற்கு சமம் என கூறியுள்ளது. அதேபோல வரலாற்றில் எந்த பக்கத்தில் நிற்க வேண்டும் என்பதை இந்தியா சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும் என இவ்வாறு அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு இந்தியா எந்த வகையில் பதில் அளிக்கும் என்பது தெரியவில்லை. அனைத்து நாடுகளும் ரஷ்யாவை எதிர்த்து வரும் நிலையில் இந்தியா இவ்வாறு வணிக ஒப்பந்தம் கொள்வது ரஷ்யாவை ஆதரிப்பது போல் ஆகும்.