அதிமுக அமைச்சர்கள் வயிற்றில் புளிய கரைக்க செய்கிறது?தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்?

0
112
Does the AIADMK ministers get sour in their stomachs? Who will the verdict favor?
Does the AIADMK ministers get sour in their stomachs? Who will the verdict favor?

அதிமுக அமைச்சர்கள் வயிற்றில் புளிய கரைக்க செய்கிறது?தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும்?

சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட உள்ளதாக கூறி, இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் அ.தி.மு.க., உறுப்பினர் சண்முகம் என்பவர் இந்த வழக்கை  நடத்தினார்.மேலும் இந்த வழக்கை விசாரித்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது அது உங்களின் பாடு என்று கூறி இடைக்கால தடை கோரி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த மனுவை எதிர்த்து சண்முகம் தரப்பில் மேல்முறையீட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர், அ.தி.மு.க.வில் புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக்கூடாது என்று கூறி தடையை  விதித்து உத்தரவிட்டார்கள்.இந்நிலையில் சென்னையிலுள்ள ஐகோர்ட்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் நன்மைக்காக ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை குறித்து அவர் சில கேள்விகளை எழுப்பியும் கட்சியின் நிலைமை பற்றியும் பட்டியலிட்டார்.

அதில்அ.தி.மு.க பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் எவையும் இயற்றக்கூடாது.அதையும் மீறி தமிழ்மகன் உசேனை அ.தி.மு.க வில் நிரந்தர அவைத்தலைவராக நியமித்து புதிய தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அவைத்தலைவர் நியமனமே ஒரு  சட்டவிரோதமான செயல். மேலும் வருகிற 11-ந்தேதி பொதுக்குழுவை அவர் கூட்டுவதும் கண்டிக்கத்தக்கது .இதைதொடர்ந்து கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று நம் அனைவரும் அறிந்தவையே.

அந்த பதவிகளை அவர்களே ஒருங்கிணைந்து பேசி ஒரு பதவியில் இருக்கும் தலைவரை நீக்கிவிட்டு மீண்டும் அந்த பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முடியாது.இந்த செயல் சாத்தியமாகுமா ? என்றார் ஓ.பன்னீர்செல்வம்.மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது 15 நாட்களுக்கு முன்னாடியே அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு ஒன்றை விடுக்க வேண்டும்.

ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடைபெற உள்ளது.இதை பற்றி எனக்கு கடந்த 4-ந்தேதி அன்றுதான் அழைப்பு வந்தது சேர்ந்தது. எனவே உரிய கட்சி விதிமுறைகளை பின்பற்றாமல் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார்.

இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று புதன்கிழமை விசாரிப்பதாக கூறினார். இதன் காரணமாக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை, இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனால் இரு தரப்பு ஒருங்கிணைப்பாளர்களின் அமைச்சர்களும்,கட்சி தலைவர்களும், மற்றும் அதிமுக தொண்டர்களும் சுப்ரீம் கோர்ட்டில் குவிந்துள்ளனர்.இதனால் அங்கு பரபரப்பு நீடித்து வருகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Parthipan K