மறந்தும் கூட இந்த எண்ணெயில் இதை மட்டும் பண்ணிடாதிங்க!

0
93

கடவுளுக்கு நாம் செய்யும் ஒரு முக்கியமான வழிபாடு விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வதே! அந்த விளக்கை நாம் எவ்வளவு கடுமையான வழிபாடு செய்து ஏற்றி இருப்போம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் நாம் ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொள்வது அவசியம். அப்படி நாம் ஏற்ற கூடிய விளக்கில் எந்த எண்ணெய் ஊற்ற வேண்டும்? எந்த எண்ணெய் ஊற்றக் கூடாது? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க போகின்றோம்.

1. முதலில் நாம் வீட்டில் இருக்கும் காமாட்சி விளக்கில் நல்லெண்ணெய் மற்றும் நெய் இரண்டரை தவிர வேறு எதுவும் பயன்படுத்த கூடாது. அப்படி உங்கள் வீட்டு கஷ்டம் நீங்க விளக்கை ஏற்ற வேண்டுமெனில் மண் அகல் விளக்கில் ஏற்றலாம். தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், 5 எண்ணெய் சேர்ந்த கூட்டு எண்ணெய், இப்படி எந்த எண்ணையையும் காமாட்சி அம்மன் தீபத்தில் ஊற்றவே கூடாது., என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
2. அடுத்தது நாம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய கடலை எண்ணெய், ரீஃபைண்ட் ஆயில் என எதையும் பயன்படுத்த கூடாது. அகல் விளக்கில் கூட இந்த எண்ணெய்யை ஏற்ற கூடாது. எவ்வளவு தேவை இல்லாமல் செலவு செய்கிறோம் கடவுளுக்கு செய்யும் விசயத்தில் பாகுபாடு பார்க்காமல் சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள்.
3. ஒரு சிலர் வீட்டில் நல்லெண்ணெய் வைத்து சமையலுக்கும் அதையே பயன்படுத்துவார்கள். பூஜைக்கும் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யவே கூடாது. தனியாக வைத்து பயன்படுத்துங்கள்.உங்களால் முடிந்த அளவிற்கு சிறிய அளவு காமாட்சி அம்மன் விளக்கை வாங்கி , சிறிய அளவு மண் விளக்காக இருந்தாலும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி, இறைவனை வழிபட்டு வரும்பொழுது உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
4. நாள்தோறும் கருப்பு எள்ளை சமையலில் பயன்படுத்தும் பொழுது நன்மை கிடைக்கும். ஆன்மீக ரீதியாக நல்லது .
5. சனீஸ்வரனால் நமக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறைந்து சனி பகவானின் முழு சக்தியை பெறுவதற்கு நம் சமையல் அறையில் எள் இருப்பது நல்ல ஒரு பரிகாரமாக கூறப்படுகிறது.
6. சண்டை சச்சரவுகள் நீங்கி, வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்கி, நன்மை அடைவதற்கு, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் கஷ்டத்தில் பாதி குறைந்துவிடும்
இந்த முறையை முறையாக பயன்படுத்துங்கள்.

author avatar
Kowsalya